முச்சந்தி

வெளிநாட்டு பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் சில வெளிநாட்டுப் பிரஜைகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற முடியாத கஷ்டமான நிலையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டே பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலதிகமாக, தொடரும் நாட்களில் விமான சேவைகள் ரத்துச் செய்யப்படுமானால் மேலும் 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்குவதற்காகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *