முச்சந்தி

மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் போர்க் கப்பல்; காலி கடற்பரப்புக்கு அப்பால் இலங்கை, இந்திய கடற்படையினர் கூட்டாக தேடுதல்

புதுடெல்லி: ஈரானின் ஐரிஸ் டேனா போர்க் கப்பல் காலி கடற்பரப்புக்கு அப்பால் அமெரிக்க ஏவுகணைத் மூலம் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையோடு இணைந்து தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 4ம் திகதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இலங்கையின் காலி கடற் பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கினோம். ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டது. கொச்சியில் இருந்து ஐஎன்எஸ் இக்சாக் கப்பலும் சம்பவ பகுதிக்கு சென்றது.

இலங்கை கடற்படையோடு இணைந்து இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டது. இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று உயிர் காக்கும் ஜக்கெட்டுகளை வீசியது. இலங்கையோடு இணைந்து தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *