முச்சந்தி

குடவத்தை மக்கள் மீது பொய் வழக்கு போட்டு கொடூரத் தாக்குதல்; நெல்லியடி பொலிஸாரின் அராஜகம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது நெல்லியடி பொலிஸாரால் பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், மக்கள் மீது மூர்க்கதனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இச் சம்பவங்கள் தொடர்பில் குடவத்தை மக்கள்   பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் இது குறித்து உரையாடியதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *