முச்சந்தி

தமிழ் மக்கள் உரிமைக்காக ஆஸி பாராளமன்றில் என்றும் குரல் கொடுத்த வேர்ஜீனியா ஜட்ஜ் !… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு முக்கியமாக, அவர் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் தமிழ் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவும், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கவலைகளைக் கேட்கவும் ஒரு நிலையான குரலாகவும், தமிழ் மக்கள் உரிமைக்காக ஆஸி பாராளமன்றில் என்றும் குரல் கொடுத்த வேர்ஜீனியா ஜட்ஜ் காலமானார்.
வேர்ஜீனியா ஜட்ஜ் (Virginia Judge) ஸ்ட்ராத்ஃபீல்டின் (Strathfield) தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றினார்.
அத்துடன் ஸ்ட்ராத்ஃபீல்டின் நகரத்தின் முன்னாள் மேயராகவும் இருந்தவர்.
நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினராக பணியாற்றிய வேளையில் தமிழ் மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது. பொது சேவை என்பது சமூக மட்டத்தில் தொடங்குகிறது. கடினமான காலங்களில் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்ற அவரின் பங்களிப்பை நாம் அனைவரும் அறிவோம்.
அத்துடன் ஈழப்போரின் இறுதிக் காலகட்டத்தில், சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியும் இருக்கிறார். மேலும் 2006 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நடைமுறை அரசின் தலைநகர் கிளிநொச்சி சென்று தமிழ் மக்களையும், போராளித் தலைவர்களையும் சந்தித்தார்.
அதன் பின்னர் தமிழ் தேசம் சென்ற பயண விஜயம் செய்தது குறித்து வேர்ஜீனியா ஹட்ஜ் ஆஸி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *