கவிதைகள்

அருமை வாழ்வு அமையும் நிச்சயம்!… கவிதை… ஜெயராமசர்மா

ஒளியும் வரும் இருளும் வரும்
உலகி லியற்கையே
வரவும் வரும் செலவும் வரும்
வாழும் வழியிலே

உறவும் வரும் பிரிவும் வரும்
உலக வாழ்விலே
உணர்வு இலா வாழும் வாழ்வு
உயிரைப் போக்கிடும்

மனைவி எனும் நல்ல துணை
வாய்க்கும் வேளையில்
துணிவு மனம் ஏறி நின்று
துயரைப் போக்கிடும்

நல்ல மனை என்றும் வாழ்வில்
வெற்றி தந்திடும்
தொல்லை இலா பிள்ளை வாய்த்தால்
அல்லல் தீர்ந்திடும்

அன்பு அறன் வாழ்வில் என்றும்
அகத்தில் இருத்தினால்
அமையும் வாழ்வு அருமை வாழ்வாய்
அமையும் நிச்சயம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *