ஒரு உன்னதமான திறமையும் அன்பும் நிறைந்த மருத்துவர் டாக்டர் விக்கினேஸ்வரா

-பேராசிரியர் சு.ரவிராஜ் யாழ்.மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி
(சுன்னாகத்தில் நாற்பது வருடங்களாக மருத்துவ பணியாற்றிய மறைந்த டாக்டர். பரமநாதன் விக்கினேஸ்வராவின் நான்காவது (22/2/2022) ஆண்டு நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
டாக்டர். பரமநாதன் விக்கினேஸ்வரா ஒரு நேர்மையான, திறமைமிகு சமூக மருத்துவராக நான்கு தசாப்தங்களாக சுன்னாகத்தில் பணியாற்றினார். அவர் சுன்னாகம் மக்களிடையே ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல் நெருங்கிய நட்பை பேணியவராகவும் மிகவும் பிரபலமானவர்.
அவர் எங்கள் குடும்ப மருத்துவர், எங்கள் குடும்பமும் மருத்துவரின் குடும்பத்தினரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். பின்னர் அவர் எனக்கு உறவினராக மாறிவிட்டார் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுன்னாகம் யாழ்ப்பாண தீபகற்பத்தில் ஒரு பிரபலமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இடம். சுன்னாகத்தில் பிரபலமான சந்தை பலருக்கும் அறிந்ததே. விவசாய வளம் மிகுந்த நிலத்தில், நன்னீர் இந்த மண்ணின்மற்றொரு முக்கிய ஆதாரமாகும்.
சுன்னாகம் வாழ் விவசாயிகள், தொழிலதிபர்கள், கைவினைஞர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஒவ்வொரு குடும்பத்திற்கும் விக்கி டாக்டரை நன்கு தெரியும். டாக்டர் விக்கினேஸ்வரா நோயாளிகளுக்கு தனது சேவைகளை அன்பான முறையிலும் மிகவும் நட்பான முறையிலும் வழங்கி வந்தார்.
22/2/2022 அன்று அவர் மறைந்த பிறகும் சுன்னாகம் மக்கள் அவரது சேவையையும் மனிதநேயத்தையும் இன்னும் போற்றுகிறார்கள். அவர் நம்முடன் இல்லாவிட்டாலும் சுன்னாகம் மக்களின் இதயத்தில் என்றென்றும் வாழ்ந்து வருகிறார்.
-பேராசிரியர் Dr.சுப்ரமணியம் ரவிராஜ்
MBBS (SL), MS (SL), FCSSL
யாழ்.மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி.
அறுவை சிகிச்சை பேராசிரியர்,
பல்கலைக்கழக அறுவை சிகிச்சை பிரிவு, போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம்.
![]()