உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டஅச்சுறுத்தலுக்கு எதிராக செயற்பட்டவர் ”திஸ்ஸ”

நேர்மையான அரசியல் மற்றும் துறைசார் அறிவுப் பங்களிப்பைச் செய்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். பல பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவரது ஆளுமை, அறிவார்ந்த தலைமை என்றும் போற்றதக்கது என அவரின் மறைவுக்கு அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம் தெரிவித்துள்ளது
அநுராதபுர மாவட்ட முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன தலைவர் ஏ.ஜீ.நளீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில்
வடமத்திய மாகாண ஆளுநராக அவர் கடமையாற்றிய காலப்பிரிவில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அநுராதபுரம் மாவட்டத்தில் பல முஸ்லிம் கிராமங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்களை பாதுகாப்பு படையினர் உரிய காரணமின்றி, சந்தேகம் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் கண்காணித்தல் மற்றும் பின்தொடர்வதை கைவிடும் நடவடிக்கைக்கு அப்போதைய ஜனாதிபதியின் தலையீட்டுடன் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்தவர்.
தபுத்தேகம நகரிலும், தபுத்தேகம உப பொருளாதர நிலையத்திலும் முஸ்லிம்களால் அனுமதிப் பத்திரங்களுடன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் இருந்து வரும் விடயத்திற்கு தீர்வை காண்பதற்கு தலையிடுமாறு நாம் விடுத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட அரசாங்க அதிபரை பணித்து அதன் பிரகாரம் வர்த்தக சம்மேளனத்துடன் இரு சந்திப்புகளை நடத்தியமை அவரது இனவாதமற்ற அரசியல் தற்துணிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
அதேபோல், அநுராதபுரம் வாட்டத்தில் முன்னேற்றத்தை காண்பித்து வரும் தூரப்பிரதேச, தெரிவு செய்யப்பட்ட மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சமயம், பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதற்கு முன்வந்தமை அனைவரையும் உள்ளடக்கிய அவரது ஆளுகைக்கு சிறந்த முன்னுதாரணம்.
![]()