ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவும் திருக்கோணேஸ்வரமும்… ஏலையா க.முருகதாசன்

இன்று முகநூல் நண்பர் ஒருவரின் பதிவில் திருகோணமலை சிவன்கோவிலின் செயற்கை நுண்ணறிவுப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.அவரின் அவரின் பதிவுக் கருத்துக்கு எழுதிய பதில்தான் இனிக் தொடர்பவை. அவரின் முகநூலில் பதியலாம் என்றால் அதைக் கிளிக் செய்ய அம்முகுநூல் மறைந்துவிட்டது. பரவாயில்லை,எனது கருத்தை இங்கே பதிவு செய்துள்ளேன்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடுவது இருக்கட்டும்.உண்மை எது என்பது வரலாற்றிலிருந்து தேடி எடுக்க வேண்டும்.அதுதான் இயற்கையானது.
இந்தப் படங்களைப் பாராட்டி புளகாங்கிதம் கொண்டு வாழ்த்திக் கருத்துக்களைப் பதிவிட்டவரிடம் ஒரு கேள்வி.நீங்கள் கற்பனை உலகில் வாழப் போகிறீர்களா அல்லது நிஜத்தில் வாழப் போகிறீர்களா என்பதேயாகும்.
அதற்காக கற்பனையில் ,மனக் கண்ணால் பார்த்தவற்றைத்தானே விஞ்ஞானக் கண்டு
பிடிப்புகளாகின என்ற வாதத்தை முன் வைக்காதீர்கள்,அது வேறு,செயற்கை நுண்ணறிவு வேறு.
உதாரணமாக ஒருவருடைய தாயாரின் உருவப்படத்தைத் தெரிந்திருந்தும் செயற்கை நுண்ணறிவு வேறொரு படத்தை உங்களுக்கு காட்சிப்;படுத்தினால் அதை ஏற்றுக் கொள்வீர்களா.
நீங்கள் இலங்கையராக இருந்து, செயற்கை நுண்ணறிவு சொல்கின்றது இலங்கையில் தமிழர்களென்று இருப்பவர்கள் தமிழர்களே அல்ல அவர்கள் அனைவரும் தமிழர்களாக மாறிய சிங்களவர்களே .எனவே இலங்கை முழுவதும் வாழும் மக்களனைவரும் சிங்களவர்கள்தானெறால் ஏற்றுக் கொள்வீர்களா?.
ஏற்கனவே வடபகுதியில் வாழும் கோ….வினர் சிங்களவர்களின்: பரம்பரையினர் என்றும் சோழனின் படையெடுப்பின் போது அதனை எதிர்த்த சிங்கள கொவிகமவினரில் கணிசமான தொகையினரை கைது செய்து வடபகுதியில் குடியேற்றியதுடன் புலம்பெயர்ந்து வடபகுதிக்கு வந்த குnயேறி மருவிய கொவிகமவினரதான் அவர்கள,அவர்கள் இப்பொழுதும் ஆங்காங்கே தெல்லிப்பழை,சுண்ணாகம்,சங்கானை,சாவகச்சேரி, கொடிகாமம்,காங்கேசன்துறை தையிட்டீ,பலாலி,மயிலிட்டி,கரவெட்டி,கரணவாய்,சுளிபுரம் தொல்புரம்,தெல்லிப்பழையில் புதுத்தோட்டம் தெல்லிப்பழையில் பத்தாவத்தை,நீலாவத்தை ,சுண்ணாகத்தமில்: கந்தரோடை,சூராவத்தை என்ற சிங்கள தோட்டம் என்பதற்கான வத்தை என்ற குறிச்சிகளில் வாழுகிறார்கள் என்ற உண்மையும் உண்டு.

இந்த உண்மை காரணமாகத்தான் தையிட்டி விகாரை விடயத்தில் சிங்கள வரலாற்றாய்வாளர்கள் விடாப்பிடியாக நிற்கிறார்கள்.நீங்கள் இந்தப் பிரிவினரை உற்றுக் கவனித்தால் அவர்கள் சிங்கள மக்களுக்கு சார்பான மனநிலை உள்ளவர்களாகவும் அவர்களின் பண்புகளை ஒத்தவர்களாகவும் இருப்பார்கள்.
செயற்கை நுண்ணறிவு ஒரு கட்டத்தில் முழு இலங்கையும் சிங்களவர்களுடையதே என்று சொல்லத்தான் போகின்றது.செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடுபவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகலாம்.
ஏற்கனவே பாரதியார் சிங்களத் தீவுனுக்கோர் பால அமைப்போம் என்று சொல்லியிருக்கிறார்.அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு சத்தம்சாவடி இல்லாமல் ஊர்ந்து போய் பல்லுப்பதிக்கிற பாம்பு மாதிரி செயல்படுகிறது.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடுபவர்கள் இலங்கை முழுவதும் சிங்களகர்களுக்குரியதே என்பதை சீரணிக்க முடியாவிட்டாலும் அதையும் ஏற்கத்தான் வேண்டும். ஏற்கனவே வடபகுதிகளில் அதற்கான சரித்திரத் தடயங்களாக தையிட்டி விகாரை கந்தரோடை தொல்புரம் சுளிபுரம் போன்ற இடங்களில் விகாரைகளின் எச்சங்கள் உண்டு என்ற உண்மையும் உண்டு.
![]()
