கவிதைகள்

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்!… கவிதை… பயணம் – 4….. சங்கர சுப்பிரமணியன்

வாழ்க்கையில் காதல்
வருவதும் உண்டு
வந்த பின் அதுவும்
மறைவதும் உண்டு

வாழ்க்கையில் காதல்
வருவதும் உண்டு
வந்த பின் அதுவும்
மறைவதும் உண்டு

ஆண்புறா பெண்ணை
அழைத்திடும் நேரம்
பெண்புறா அதனுடன்
கூடியே வாழும்

ஆண்புறா பெண்ணை
அழைத்திடும் நேரம்
பெண்புறா அதனுடன்
கூடியே வாழும்

இயற்கையில் இதுவே
நடந்திடும் போது
வாழ்க்கையில மட்டும்
தோல்வியே தானோ

வாழ்க்கையில் காதல்
வருவதும் உண்டு
வந்த பின் அதுவும்
மறைவதும் உண்டு

எந்தன் வாழ்வில்
காதலும் வந்ததே
மலைமுகடு மேகமாய்
தவழ்ந்து மறைந்ததே

எந்தன் வாழ்வில்
காதலும் வந்ததே
மலைமுகடு மேகமாய்
தவழ்ந்து மறைந்ததே

இலையுதிர் காலம்
உதிர்த்திடும் இலையாய்
கரைதொட்ட அலையாய்
விடைபெற்று சென்றதே

வாழ்க்கையில் காதல்
வருவதும் உண்டு
வந்த பின் அதுவும்
மறைவதும் உண்டு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *