சல்லியர்கள் திரைப்படம் இலங்கைக்கு எதிரான சதி… ஏலையா க.முருகதாசன்

ஒரு செயல்பாட்டின் தோற்றமும்,அது பிரதிபலிப்பும் அதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதை கண்டுகொள்ள,உணர ஏன்? ஏதற்கு ? எப்படி? என்று சிந்திக்க வேண்டும்.
-சாக்கிரட்டீஸ்
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மீதான இந்தியாவின் உளவியல் போர் பல கட்டம் கட்டமாகப் பல்வேறுபட்ட வடிவங்களில் நடைபெற்று வருவதை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியம்.
இது இலங்கையில் இனக்கலவரம் என்ற பெயரில் ஆரம்பித்து இலங்கையைக் கையாள்வதற்கான ஒரு பொறிமுறை வழியாக தொடர்வதில் புலம்பெயர் தமிழர்கள் பகடைக்காய்களலாக்கப்பட்டுவிட்டனர்.
புலம்பெயர் தமிழர்கள் தாம் இந்தியபப் புலனாய்வுப் பிரிவின் சிலந்திவலை போன்ற சதிவலைக்குள் தாம் அகப்பட்டுள்ளோம் என்பதை அவர்களால் உணரமுடியவில்லை.அதை உணரத் தவறுவதற்குக் காரணம் இந்தியத் தமிழர்கள் தமது தொப்புள்கொடி உறவுகள் என்ற தவறான அபிப்பராயமாகும்.

சிலந்தி வலையை ஒரு எடுகோளாக இக்கட்டுரையில் குறிப்பிடுவதற்குக் காரணம்.
சிலந்தி தனது இரையைச் சிக்க வைப்பதற்காக,இரையை கவர்வதற்காக அழகான வலையொன்றை பின்னி இரைக்காக காத்திருப்பதும் பூச்சிகள் அழகாக வலையில் தம்மனதைப் பறிகொடுத்து வலையில் வந்து உட்கார்ந்ததும் வலையில் உள்ள பசைத்தன்மை பூச்சிகளின் கால்களில் ஒட்டிக் கொள்வதால் வலையிலிருந்து விடுபடமுடியாமல்,எப்படியாவது வலையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று எவ்வளவோ கடும் முயற்சிகள் செய்து அங்குமிங்குமாக புரண்டாலும் மேலும் மேலும் வலையினால் பூச்சியின் உடல் எங்கும் சுருட்டப்பட்டு சிலந்திக்கு இரையாவது போலத்தான் ஈழத்தமிழர்கள் இன்றைய நிலை.ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தமது நாட்டில் தமது இனச் சிக்கல்களை அங்கு தீர்க்காமல் தமிழகம் தீரவைத்தரும் என அவர்களை நாடுவது ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் அறிவற்றவர்களேதான் எனச் சிந்திக்க வைக்கின்றது.
அதிலும் புலம்பெயர்ந்த தமிழர்களை இந்திய வலையிலிருந்து இனி மீட்கவே முடியாது.நடந்து முடிந்த ஆயுதப் போராட்டத்தில் ஆங்காங்கு புலிகள் ஈட்டிய வெற்றிகளை அசை போட்டு,இரை மீட்டு,ஏன் அயதப் போராட்டம் ஆரம்பித்தது என்பதை மறந்து சண்டை நினைப்பில் ஆழ்ந்து,அடிப்படைத் தாற்பரியம் மறந்து,உரிமைக்காக ஆயதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பது (ஆயுதப் போராட்டம் தமிழீழ விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல,இந்தியாவால் இலங்கையைக் கையாள்வதற்கு ஆரம்பிக்கப்பட்டது என்பதே உண்மை)ஓரங்கட்டப்பட்டு சண்டைக்கு ஒரு உரிமைப் போராட்ட இலச்சினை தேவைப்பட்டது என்பது போல புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் போராட்டத்தின் போது தமிழ்ப் போராளிகளின் வீரத்தைச் சிலாகித்துப் பேசுவதை பெருமையாகக் கருதுகிறார்களே தவிர அவர்களால் வேறு திசையில் இந்திய அரசியலின் தலையீடு இருந்தததா எனச் சிந்திக்க முடியாதவாறு புளகாங்கித இசைவாக்கம் பெற்றுள்ளனர்.
தமிழர்களின் வரலாற்றைப் பேசும் போதெல்லாம்,தமிழ் மன்னர்களின் வீரத்தை மட்டுமே சிலாகித்துப் பேசும் போக்கு தமிழர்கள் மத்தியில் மிதமிஞ்சி இருப்பதைப் பார்க்க முடிகின்றது.அவர்களின் தவறுகளை,அவர்களும் தவறுகள் விட்டிருப்பார்கள்,நீதி பிழைத்திருப்பார்கள் என்பதை ஒரு இடத்தில்கூடத் தமிழர்கள் பேசுவதில்லை.
வீரம் மட்டுமே தமிழர்களின் தகுதிநிறைவு என்றால் தமிழ் மன்னர்களின் வீரத்தை விதந்துரைத்து மகிழ்ந்து கொள்ளும் தமிழர்கள்,இந்த உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று சிந்திக்கத் தவறிவிட்டனர்.
பல மொழிகள்,இன அடையாளங்கள் எனக் கொண்ட நாடுகள் உலக அமைப்hன ஐக்கிய நாடுகள் சபையில் தமது நாட்டின் அதிகாரத்தை,இறைமையை நிலைநாட்டவும் மற்றைய நாடுகளுக்காக கதைக்கவும், உலக அரசியலையே தீர்மானிக்கின்ற சக்தியாகவும் இருந்து வருகின்றன.

ஆனால் வீரம் செறிந்த தமிழினம்,உலகக் கடலெங்கும் கப்பல் ஓடி வணிகம் செய் தமிழினம் என்று மேடைகளிலும் எழுத்துக்களிலும் புளகாங்கிதம் கொண்டிருக்கும் தமிழினப்: புத்திசாலிகள் வீரம் மட்டுமிருந்தால் போதும் உகில் ஒரு நாட்:டையே உருவாக்கலாம் என்ற தவறான கால எடை போடலே உலகெங்கும் வாழும் தமிழினத்தின் நிலையாகும்.
இலங்கையைக் கையாள்வதற்கு காலத்துக்கும் இலங்கைத் தமிழனே போதும் என்ற இந்தியாவின் சாணக்கியத்தனம் சரியானதே.
ஈழத் தமிழன் வேறு இந்தியத் தமிழகத் தமிழன் வேறு என ஈழுத்தமிழன் பிரித்துப் பார்க்க முடியாதவனாக இருக்கிறான்.எந்த நாட்டவன் என்பதே அடையாளப்படுத்தல்.அடையாளப்படுத்தலில் ஈழத்தமிழன் இலங்கையன் என்பதே உறுதியானது, நிரந்தரமானது.
இலங்கையை அதன் பொருளாதாரக் கட்டமைப்பை,அதன் சமூக வலுவை சீரழிக்கவே இந்தியா தனது உளவு அமைப்பினைக் கொண்டுபுலிகளை உருவாக்கி இலங்கையைப் பின்னடையச் செய்ய வழியமைத்தது என்பதைப் புரிந்து கொள்ள, ஈழத்தமிழர்கள் பாடம் படித்து தெளிய இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்லுமோ தெரியாது.
ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கையில் பல அறிவுஜீவகள் இந்தியா எம்மைப் பயன்படுத்தி இலங்கையைப் பணிய வைக்க முயற்சிக்கின்றது என்று சொன்னார்கள் அதனை யாருமே காதில் விழுத்தவே இல்லை..அவ்வாறு சொன்னவர்களை துரோகி என்று சொல்வதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்கள்.
ஈழத்தமிழர்களின் உளவியல் பலவீனம் மீது இந்தியா ஆளுமை செலுத்தி வருவதை அண்மையில் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்பட்ட சல்லியர்கள் திரைப்படத்தை உற்றுக் கவனித்தால் அரசியல் தெரியாதவர்களுக்கும் இது புரியும்.ஈழத்தமிழர்களை தனிநாட்டுக் கோரிக்கை என்ற இலவம் பழத்தைக் காட்டி வீரத்தினால் அதைச் சாதிக்க முடியும் என நம்பிக்கை கொடுத்து இறுதியில் ஈழத்தமிழினத்தை அனாதையாக்கி இப்பொழுது மாவீரர்களின் அடையாளங்களையும் நினைவூட்டி எதுவுமே எமக்குத் தேவையில்லை நாம் கடந்தகாலத்தில் நடந்த ஆயுதப் போராட்டத்தையும்,மாவீர்ர்களையும் நினைத்துக் கொண்டிருந்தாலே போதும் என ஈழத்தமிழர்கள் அதனை இரைமீட்பது போல மீட்டிக் கொள்ள காயை நகர்த்தியுள்ளது இந்தியா என்பதை இன்னுமா ஈழத்தமிழன் புரிந்து கொள்ளவில்லை.
மாவீர்களின் உயிரைப் பணயம் வைத்து அதன் மீதுதனது இராஜதந்திர அரசியலை நடத்திவரும் இந்தியாவை, அனைத்துச் செயல்பாடுகளிலுமே அறிவுஜீவித்தனமான செயல்பாடுகளுக்கூடாக நாட்டை நிர்வகித்து வருகின்ற புலம்பெயர்: நாடுகளில் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சல்லியர்கள் திரைப்படம் ஏன் இக்காலகட்டத்தில்: தயாரிக்கப்பட்டது,அதன்: இயக்குனர் யெர் கிட்டு என்று ஏன் இடப்பட்டது என்பதை புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களை ஆயுததாரிகளாக மாற்றி அதற்கு தமிழீழ விடுதலைப் போர் என்று பெயர் கொடுத்து,போரிட்டு இறந்த அப்பாவி வீரர்களை மாவீரர்களாக்கி,தமிழர்களின் நிலங்கை அபரிக்கச் செய்து பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல தமிழர்களை தவறாக வழிநடத்தி, இலங்கை அரசுக்கு தமிழ்ப் போராளிகளை அழிக்க உதவி செய்த இந்தியா இப்பொழுது அநுரா அரசுக்கு தமிழர்கள் எதிர்பாராதளவுக்க ஆதரவு கொடுக்கிறார்களே என இன்றைய அரசுக்கு புலம்பெயர் தமிழர்களை வைத்து நெருக்கடி கொடுக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றது.தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையர்களாக திரட்சி பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாகவே இருக்கின்றது.
இது ஈழத்தமிழினத்திற்கும் இலங்கைக்கும் செய்யும் பெரும் சதியாகும்.சல்லியர்ஸ் திரைப்படத்தில் காட்டப்படுகின்ற போராளிகளை ஒரு இடத்தில் வைத்துச் சுட்டுத் தள்ளுகின்ற காட்சியை காட்டியதே புலம்பெயர் தமிழர்களை மீண்டும் கொதிப்படைய வைப்பதற்கேதான்.இந்தச் செயல் முன்பே இந்திய உளவு அமைப்பால் இட்டுக்கட்டியதோ எனச் சந்தேகிக்க வைக்கின்றது.
போராட்டம் நடக்கும் போது அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று இலங்கையரசுக்கு அறிவுரை சொன்னது இந்தியாதான்.
சல்லியர்ஸ் திரைப்படத்தில் நடித்தவர்கள் நடிகர்கள் மட்டுமே.அவர்களுக்கு தாம் எந்த சூழ்ச்சி நோக்கத்திற்காக நடிக்கிறோம் என்பது தெரியாமலுமிருக்கலாம்.
இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறி எப்படி இப்படம் வெளியிடப்பட்டது என்று ஒரு கேள்வியை முன்வைத்தால் தெளிவான பதில் கிடைக்கும்.அந்தப் பதில் இந்தப் படம் இந்திய உளவுத்துறையின் ஆலோசனையின் பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்துத் தயாரிக்கப்பட்டது என்பதேயாகும்.

![]()