இலங்கை

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (23) காலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

கண்டிக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீட மகா நாயக்கர் அதிபரை சந்தித்துள்ளார்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகா நாயக்கர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்தச் சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பின்னர், ஊடங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, தான் தற்போது அரசியலில் இல்லை என்று தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *