கட்டுரைகள்

பராசக்தி திரைப்படமும்: திமுகவின் அரசியல் வியூகமும்! ….. ஏலையா க.முருகதாசன்

நேற்றைய தினம் (10.01.26) பராசக்தி திரைப்படம் பார்த்தேன்.அது ஜனரஞ்சகப்படம் அல்ல.இது நிச்சயமாக எதிர்வரும் தமிழகத் தேர்தலை குறிவைத்து எடுக்கப்பட்ட படமேதான்.

படம் பார்க்க வந்தவர்களில் ;பெரும்பாலானவர்கள் ; இளைஞர்கள்.அவர்களின் பார்வையில் படத்தின் கதைக்களம் பற்றியோ அல்லது அப்படம் எந்நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது என்பது பற்றிய உள்னிப்பாக கவனிக்கும் போக்கு பெரும்பாலும் இருக்காது.

அவர்கள் சிவகார்த்திகேயன் என்ற கதைக் கதாநாயகன்,ஜெயம் இரவியாகவிருந்து இப்பொழுது இரவி மோகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகன் முதல்முறையாக இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதைக் கேள்விப்பட்டு அவரின் பசுமையான முகத் தோற்றத்துக்கு வில்லத்தனம் சரிவருமா என்பதைப் பார்க்கவும்,பல படங்களில் கதாநாயகனாக நடித்த முரளின் மகனான அதர்வா துணைப் பாத்திரத்தில் அதுவும் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிக்கிறாராமே அவருக்கு அது சரிவருமா என்ற கேள்விகளுடந்தான் படம் பார்க்க வந்திருப்பார்கள்.

ஜனநாயகன் படத்துக்கு இருக்கைகளுக்கு முன்பதிவு செய்து அப்படம் நிறுத்தப்பட்டதால் அதற்கு மாற்:றாக பராசக்தி படம் பார்க்க வந்தவர்களும் இருந்தார்கள்.படம் பார்க்க வந்தவர்களில் கணிசமான தொகையினர் இந்தியர்களாகவிருந்தனர்.பராசக்தி என்ற பெயரில் முன்பும் ஒரு படம் வந்திருந்தது.அதுதான் நடிகர் சிவாஜியின் முதல் படம்,அதற்கு கதைவசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி.

இரவி மோகனின் வில்லன் கதாநாயகன் கதாபாத்திரம் அச்சொட்டாக அவருக்குப் பொருந்தியிருந்தது உண்மைதான்.வில்லன் என்றவுடன் வியர்வை முகம் எங்கும் எண்ணைபோல கசிந்திருக்க வேண்டும்,உடற்கட்டமைப்புக்காக பயிற்சி எடுத்த உடம்பாக இருக்க வேண்டும்,பனங்கிழங்கை வார்ந்து போட்டது போல ஒழுங்காக கிளிப் பண்ணாத மீசையும் தாடியும் இருக்க வேண்டும்.குடும்பி முடிஞ்சு இருக்க வேணும் என வில்லன்களை தமிழ்ச் சினிமா உலகம் கட்டமைத்து வைத்திருக்க,விடியற்காலை நாலுமணிக்கு மணிக்கூட்டு மணி அடிக்காமலே எழுந்து பழக்கப்பட்டவர்கள் போல தமிழ் இரசிகர்களை மேலே குறிப்பிட்ட அலங்கோல வில்லன்களின் தோற்ற எதிர்பார்ப்புக்கு பழக்கப்படுத்திவிட்டார்கள் தமிழ்ச் சினிமா தயாரிப்பாளர்களும்,இயக்குநர்களும்.

உண்மையான வில்லன்கள் பனங்கிழங்கு தும்பு மீசை தாடி வில்லன்களாக இருக்க மாட்டார்கள்.இத்தகைய வில்லன்கள் அவனை அடிப்பது இவனை அடிப்பதுஅவனைத் தூக்குவது இவனைத் தூக்குவது எனத் தூக்கிக் கொண்டு இருப்பவர்கள்.

ஆனால் இரவி மோகனின் தோற்றம் இந்திய றோவின் உளவாளி வில்லன்களுக்கு ஒரு மில்லிமீற்றரும் பிசகாமல் பொருந்தியிருக்கின்:றது.

புலிகள் தமிழீழத்திற்காக போராடிக் கொண்டிருக்ககையில் ஐரோப்பிய நாடுகளுக்குள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,இங்கிலாந்து வந்த உளவாளிகள் எவருமே பனங்கிழங்குத் தும்புத்தாடியுடன் வரவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கு சூட்கேஸ் விற்பவர்களாகவும்,சஞ்சிகையாளர்களாகவும்,எழுத்தாளர்களாகவும் அழகானவர்களாக ஒன்றில் முகத்தை முழுக்க மழித்திருப்பார்கள் இல்லையெனில் அழகாக மீசை வைத்திருப்பார்கள்,இன்னும் சிலர் அழகாக குறுந்தாடி வைத்தவர்களாகவும் வந்தார்கள்.

இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகளுக்காக செயல்படுபவர்களிடம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கதை கொடுத்து கதை கேட்டும்,ஆடு நனையுது என்று ஓநாய் அழுதமாதிரி இனவாத சிங்கள அரசோடு ஆயுதப் போராட்டந்தான் நடத்த வேணும் என்று நெருப்பு நூர்ந்து போகாமல் ஊதுவார்களே அப்படி ஊதிக் கொள்பவர்களாகவும் இருநதார்கள்.;.

பொலிசாரும் அதிகாரிகளும் எப்பொழுதுமே முரட்டுத்தனமாக மக்களை அணுகி அணுகி அவர்களின் முகமும் உடல் மொழியும் குரலும் வில்லத்தனமாக மாறிவிட்டது.

ஆனால் இரவி மோகனைப் போன்று செயல்படுத்துபவர்கள் அவரைப் போலத்தான் இருப்பார்கள்.தேவைப்பட்டால் நல்லாய்ச் சிரிப்பார்கள்.தமிழ்ச சினமாவில் கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கின்றதே அது போல இருப்பார்கள்.தெரியாதவர்களிடமம் உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்லி வாருங்கள் கோப்பிகுடித்துக் கொண்டே பேசுவோம் என்கவர்களாகவும் இருப்பார்கள்.

ஜேர்மனியில் சில வருடங்களுக்கு முந்தி ஒரு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதை ஏற்பாடு செய்தவர்கள் இந்தியவியாபாரிகளாக வந்த றோவின் உளவாளிகள்.;.நடிகர் சரத்குமார்,தொல்.திருமாவளவன் ஆகியோர் இலங்கையில் பேரிடர்: நடக்க முந்தி சரத்குமார் வியாபாரியாகப் போனார்,மற்றவர் ஏன் போனார் என்பது இலங்கையில் எங்களுடைய ஆட்களுக்கே தெரியாது.

வில்லன்களென்றால் கரடுமுரடானவர்கள் என்றுதான் தமிழ்ச் சினிமா வட்டார இரசிகர்கள் நம்புகிறார்கள்.மலையாளச் சினிமாவில் அப்படி இல்லை.சிரித்துக் கொண்டே வில்லளத்தனம் செய்வதில் மலையாள நடிகர் பிரித்விராஜ் அப்படியே அதற்கென பொருந்துவார்.

பராசக்திப் படத்தில் காட்டப்பட்ட கிந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் பாதையில் முக்கியமானதும் உண்மையானதுந்தான்.

எனக்கு இது எப்படித் தெரியுமென்றால் எனது மாமாவும் அண்ணையும் திமுக அனுதாபிகள் ஆதரவாளர்கள்.எங்களுடைய வீட்டில் அதுசார்ந்த புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.கலைஞர் கருணாநிதி,நெடுஞ்செழியன்,அன்பழகன்,கவிஞர் கண்ணதாசன் ,ஈ.வி.கே சம்பந்த் நடராஜன் ஆகியோரின் படங்கள் அச்சிட்ட பொங்கள் வாழ்த்துகளை நான் அனுப்பியுமிருக்கிறேன்.எங்களுடைய அயலில் எங்களை திமுகாக்காரர் என்:றுதான் விளிப்பார்கள்.

திமுக சஞ்சிகைகள், பத்திரிகைகளான முரசொலி,திராவிடநாடு,முத்தாரம்,முல்லை,கோம்லண்ட் என்பதுடன் திமுக தலைவர் சிஎன் அண்ணாதுரை ஆசிரியராக இருந்து நடத்திய ஆங்கிலப் பத்திரிகை என இவையெல்லாவற்றையும் அண்ணையும் மாமாவும் மாதம் தவறாமல் ஏடுத்து வந்தவர்கள்.கொச்சிக்கடையில் இரவு நேரத்தில் திமுக பற்றியே மாமாவும் அண்ணையும் கதைப்பார்கள்.

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் எப்படி நடக்கின்றது என்பதைவிட தமிழக ஆட்சியில் என்ன நடக்குது என்பதில் ஒரு ஆர்வம் எங்களுக்கு இருந்தது.

சட்டக்கல்லூரி மாணவன் சிறீநிவாசன் கமாராஜரைத் தோற்கடித்தமையை புளாங்கிதத்துடன் அன்று பெரிய கதையாக கதைத்தனாங்கள்.

கரூரில் நடிகர் விஜயைப் பார்க்க வந்ததால்,சனநெரிசலில் மாட்டுப்பட்டு 41 பேர் இறக்க தமிழக முதல்வர் கே.ஸ்டாலின் விஜய் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்ற கோபக் கருத்தும் வெளிவந்திருந்தது.

பராசக்திதான் விஜய்க்கெதிரான நடவடிக்கை என்பதை புரிபவர்கள் புரிந்து கொண்டால் நல்லது.அரசியல்: என்பது வயிற்றிலை கயிறைக் கட்டி தூக்கிப் பாய விஜய் வேற லெவல்,செம என்பதல்ல.அரசியலைப் படிக்க வேண்டும்.அதுவும் ஒரு கல்விதான்.அரசியலில் கலைஞர் கருணாநிதியே ஒரு பல்கழைக்கழகமாக இருந்தவர்.அங்கு அரசியலை நாள்முழுக்கப் படித்தவர்தான் ஸ்டாலின், அவரிடம் படித்தவர் உதயநிதி.

அரசியல்வாதிகளை சினிமாவுக்குள்ளிருந்து தேர்ந்தெடுப்பது தமிழக மக்களின் படுமுட்டாள்தனம் என்றே துணிந்து சொல்லலாம்.

சினிமா இரசிகர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமே.அவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது.

நடிகர் விஜய் தனது சினிமா விடயத்தில் கே.ஸ்டாலின்,கலாநிதி மாறன்,தயாநிதி மாறன்,உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் போல,அதனால் தான் தமிழக முதலமைச்சராக வந்து இவர்களுக்கு பாடம் படிப்பிக்க வேணும் என்பதுதான் அவருடைய முழு இலக்குமே.

திமுக, தமிழகத்தை ஆள எடுத்துக் கொண்ட முயற்சிகள்,போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல அதனை ஒப்பிட்டுப் பார்க்ககையில் கோடியில் கால் வீதத்தைக்கூட நடிகர் விஜய் செய்யவே இல்லை,அதை அவரால் எட்டவும் முடியாது,அவரால் செய்யவும் முடியாது.

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு பராசக்தி ஓடுவதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும்,திமுகாவிடமும் சாணக்கியத்தனம் இருக்கின்றது என்பதை.

பராசக்தி படத்தில் சிஎன் அண்ணாதுரைப் பாத்திரம் ஏற்றவர் இறுதியில் இப்படிச் சொல்லுவார்,போராடி உரிமையைப் பெற வேண்டும்; என்றால் தமிழகத்தை திமுக தொடர்ந்தும் ஆள வேண்டும் என்று.

பராசக்தி திமுகாவிற்காக எடுக்கப்பட்ட படம் என்பதில் சந்தேகமேயில்லை.விஜய் தனது இரசிகர் மன்றங்களை அரசியல் கல்வி மன்றமாக மாற்றி படம் நடிப்பதை ஒரு பத்து வருசத்துக்கு நிறுத்தி முயற்சி செய்யலாந்தானே.

எம்ஜிஆர் வந்தாரே என்பவர்களுக்கு,காலம் மாறும்-முன்பு பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் அதற்கு பத்திரிகை; கல்வி தேவைப்படாமலும் இருந்தது.இன்று அப்படியல்ல.ஊடகவியலாளர் கல்வியில் பட்டப்படிப்புத் தேவை.சினிமாப் பழிவாங்கலுக்காக முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைப்பது படு முட்டாள்தனம்.விஜயின் பொதறிவின் உள்ளீடு நன்றாகவே தெரிகின்றது.

நடிகர் விஜய் முதலில் அரசியல் என்றால் என்ன பொருளாதாரம் என்றால் என்ன என்ற கல்வியை முதலில் கற்க வேண்டும்.இது ஒரு புறமிருக்க பராசக்தி படம் தெலுங்கற்றை படம் என்று ஒரூ கூட்டம் சொல்லத் தொடங்கிவிட்டது.இப்படிச் சொல்லுகிற யாழ்ப்பாணத் தமிழருக்குத் தெரியுமா யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் இரண்டாவது பெரிய பிரிவாகக் கருதப்படும் தமிழர்கள் தமிழர்களாக மாறிய சிங்களவர்கள் என்பதும்,அவர்கள் சிங்கள கொவிகமப் பிரிவினர் என்பதும் அவர்கள் சோழனின் படையெடுப்பின் போது வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் என்பதும்.

தமிழகத்திலும் சரி இலங்கையிலும் சரி தமிழர்கள் அங்கும் இங்குமாக அவர்கள் கலப்பினமே.இலங்கைத் தீவுப்புகுதிகளிலுந்தான்.தாங்கள் தமிழகத்தோடு கலந்த கலப்பினம் என்பதும் தங்களியல் தெலுங்கர்,மலையாளிகள் கலந்துள்ளனர் என்று தீவு மக்களே சொல்லியிருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *