பலதும் பத்தும்
25 கோடிக்கு விற்க்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் ஓவியம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பாம் கடற்கரை பகுதியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் ட்ரம்ப் புத்தாண்டை கொண்டாடினார்.
புத்தாண்டு விழாவின் ஒரு பகுதியாக பெண் ஓவியர் வனேசாரோராபுவேனா, இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை அங்கேயே வரைந்தார்.
முடிவில் ட்ரம்ப் அந்த ஓவியத்தை ஏலம் விட்ட நிலையில் ரூ.2 கோடியில் ஏலம் தொடங்கியது.
இறுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் ரூ.25 கோடிக்கு இயேசுவின் ஓவியத்தை ஏலம் எடுத்தார்.
இந்தப் பணம் சென்ட் ஜுட் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும், உள்ளூர் பொலிஸ் நிலைய மேம்பாட்டுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
![]()