“எங்களாலும் முடிகிறதென்றால் உங்களாலும் முடியும் அல்லவா”…. கே.ஆர்.இரமேஷ்


அறிமுகமான இருவர் சந்தித்துக் கொள்ளும் போது நலம் விசாரிப்பது வழக்கம். அப்படி நலம் விசாரிக்கும் போது விசாரித்தவரும், விசாரிக்கப்பட்டவரும் பரஸ்பரம் சந்தோசம் அடைவர். ஆனால் இருவரும் ஒருவித சங்கடத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பார். படைப்பில் ஏன் இந்த பாரபட்சம் என்று இதயம் கனத்துப் போவதை உணரலாம்.
மாற்றுத் ’திறனா’ ளிகள் :
திறன் என்பது ஒரு வேலையை செய்கின்ற ஆற்றலின் அளவாகும். மாற்றுத்திறனாளிகள் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறர் உதவியே நாட வேண்டியிருக்கும் அல்லது பிற உறுப்பின் உதவியால் நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் காரணம், உடல் உறுப்புகளின் இயக்கம் இவர்களுக்கு இயல்பாக இருக்காது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.21% மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் பல்வேறு விதமான உடல் குறைபாடுகளில் உடல் இயக்க குறைபாடுகளால் பாதிக்க பட்டவர்களே அதிகம். அதில் பெரும்பாலானோர் 0 – 14 வயதுக்கு உட்பட்டவர்கள். அதிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விவரம்.
காரணங்கள் :
பொதுவாக மரபியல் கோளாறு, சுற்றுச்சூழல் குறைபாடு தான் காரணம் என்றாலும் அறியாமை மிக முக்கியமானதாக உள்ளது. நகர்ப்புறத்தைக் காட்டிலும் கிராமப்புறத்தில் விவசாயம் சார்ந்து தொழில் புரிவரிடம் அதிமான மாற்றுத்திறனாளிகள் இருப்பதற்கு போதுமான விழிப்புணர்வு இல்லாது காரணமாக சொல்லப்படுகிறது. மனிதர்கள் பிறக்கும்போதே குறைபாட்டோடு பிறப்பது ஒரு வகை. பிறந்தபிறகு விபத்து, நோய் போன்ற காரணங்களால் மாற்றுத்திறனாளியாவது மற்றொரு வகை. இரவு – பகல், இன்பம் – துன்பம் போல் இயற்கையில் இவர்களது படைப்பில் ஏதோ ஒரு ரகசியம் அடங்கியுள்ளது.
எதிர்பார்ப்பு :
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வாழ்வதற்காக அவர்கள் ஏராளமான இடர்பாடுகளை சந்திக்க வேண்டி உள்ளது. தனது உடல் குறையை விட சமூகம் வைக்கும் தடைகளால் அதிகம் துன்பப்படும் இவர்கள் பிறரிடம் எதிர்பார்ப்பது அன்போ, கருணையோ அல்ல.. தம்மையும் பிறரை போல் அணுக வேண்டும், மதிக்க வேண்டும் என்பதேயாகும். எனினும் சிலர் தனது உடல் குறையை மன வலிமையால் வென்று அரியபல சாதனைகள் புரிந்து வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளனர்.
அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் திறன்பேசி இல்லையென்றால் ஆரோக்கியமான மனிதர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளியாக விழிபிதுங்கி நிற்க வேண்டி உள்ளது. உணவு உற்பத்தியில் இரசாயனத்தில் ஆதிக்கத்தால் 50 வயதைக் கடந்த பெரும்பாலானோருக்கு மருந்து மாத்திரை தான் ஊன்றுகோல். திறன்பேசியில் மூழ்கி கிடக்கும் இளைய சமுதாயத்தினரின் ஆரோக்கியம், (பார்வை திறன்) எதிர்காலம் என்னவாகும்?. அவர்களை மடைமாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்.?
உடல் தாழ்வு ஆகாது :
உடம்பு சிறிது வேறாயினும் உள்ளத்தின் வலிமை பெரியது என்னும் பாரதியின் கூற்றுக்கிணங்க வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை (டிகம் 03 – மாற்றுத்திறனாளிகள் தினம்) பாராட்ட வேண்டும். தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிப்பவர்களாக திகழும் அவர்கள் சொல்வதெல்லாம்…….. தலைப்பை மீண்டும் வாசிப்போம்.
“”வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் திருத்தியை விடை தாட்களை மாணவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு மாணவனை எழுப்பி எப்போதும் பெயில் ஆயிடுவ, இல்லாட்டி குறைந்த மார்க் வாங்குவ … இப்ப எப்படி இவ்வளவு மார்க் வாங்கியிருக்க.. அது எப்படினு கேட்டார். எல்லாம் மாற்றுத்திறனை பயன்படுத்திதான் சார் என்றார்கள் மற்ற மாணவர்கள்””.
![]()