வடக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; இந்திய துணைத் தூதுவரிடம் கோரிக்கை

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி காரணமாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதனால் கடல் வளங்கள் அழிவடைவதும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும், மீனவர் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்தும் பேசப்பட்டது. அதோடு சமகால அரசியல் மற்றும் சமூக விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், கட்டைக்காடு பிரதேச சபை உறுப்பினர் அலஸ்ரன் (ரஜனி), வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் றமேஸ், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நிமல் மற்றும் பருத்தித்துறை பிரதேச உறுப்பினர் குறிஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()