உலகம்

வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மைமென்சிங்(Mymensingh) நகரில்  கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏழு நபர்களை விரைவு நடவடிக்கை
பட்டாலியன்(RAB) கைது செய்துள்ளதாக தலைமை ஆலோசகர் முகமது
யூனுஸ்(Mohammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு Xல் ஒரு
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வயது 19 முதல் 46 வரை இருக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர தாஸ்,
கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசி குற்றச்சாட்டுகளுக்காக
தொழிற்சாலைக்கு வெளியே ஒரு கும்பலால் முதலில் தாக்கப்பட்டு
பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *