முச்சந்தி

இந்த அரசாங்கம் இன்னும் சிறிது காலமே இருக்கும்; மகாநாயக்க தேரர்கள் கூறினர் -அர்ச்சுனா எம்.பி.

இந்த அரசாங்கத் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தமிழன், இந்து ஆனால் கையில் அஸ்கிரிய பீடத்தால் எனக்கு கட்டிய பிரித் நூலும், மகாநாயக்க தேரர் கட்டிய பிரித் நூலும் உள்ளன. மகாநாயக்க தேரர்களை சந்தித்த நான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தேன். ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் என்றே அவர்கள் பதிலளித்தனர். இந்த அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களுக்கு வேண்டாமென்றாகிவிட்டது.

இதேவேளை தகரங்கள் கழன்றிருந்தால் 20இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள். அதனை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன். அவ்வாறு பணம் கிடைக்காதாம். தகரம் மட்டுமல்ல உள்ளாடை வாங்கவும் பணமில்லாத நிலைமையே உள்ளது. உங்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமையே உள்ளது. நான் தமிழன். என்னை எந்தவொரு சிங்களவரும் கொல்லமாட்டார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *