கட்டுரைகள்

இலங்கையில் கிராம சேவகர்களும் பொதுமக்களும்…. ஏலையா க.முருகதாசன்

இலங்கையில் கிராம சேவகர்களுக்கும் பொது மக்களுக்குமிடையில், பொதுமக்களால் வைக்கப்படும் விண்ணப்பங்கள் மீது கிராம சேவகர்கள் அலட்சியம் காட்டுவதாக எழுந்த புகார் தொடர்பாக அரசு அறிவித்துள்ள நெறிப்படத்தல் முறையில் அரசு நல்ல தகவல்களைச் சொல்லியிருக்கின்றது.அதில் மூன்று மொழிகளிலும் புகார் கொடுக்கலாம் என்பது அதிஉயர் செயல்பாடு.

அதே வேளை பொதுமக்களில் சிலர் அரச உத்தியோகத்தர்கள் தமக்குச் சேவை செய்யத்தானெ இருக்கிறார்கள் என்ற ரீதியில் அவர்களை மிரட்டும் தொனியில் கதைப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

அரசுக்குச் சொல்லி இவர்களைப் பயமுறுத்தலாம் என்ற எண்ணத்தில் கடும் தொனியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.கிராம சேவகர்களும் அந்தக் காலத்து விதானைமார் மாதிரி பொதுமக்களுடன் எடுத்தெறிந்து பேசும் போக்கை கைவிட வேண்டும்.

நானும் ஊரில் வொலன்ரியராக கிராம சேவகர்களுக்கு உதவியிருக்கிறேன்.கிராம சேவகர்கள் காவல்துறையினருடன் நெருக்கமாக இருந்து கொண்டு உனக்குப் படிப்பித்துக் காட்டுகிறேன் என்று மிரட்டுவதும் உண்டு.

அரச பணியாளர்களிடம் (எல்லாரும் அல்ல) தாங்கள் எஜமானர்கள் என்ற அகங்காரம் இருப்பது என்னவோ உண்மைதான்.அது மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக பொதுமக்களுக்கும் கிராமசேவகர்களுக்குமிடையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒரு உத்தியோகத்தரும் ஒரு நோயாளியும் பேசிக் கொள்ளும் காணொளி பார்த்தேன்..அப்போயின்ற்மென்ற்றுக்கு நீண்ட நேரமாகக் காத்திருப்பதாகவும் எப்பொழுது தருவீர்கள் என நோயாளி கேடுஇகிறார். அனால் அந்த உத்தியோகத்தர் அதற்குப் பதில் சொல்லாமல் இது சாப்பிடுகிற நேரமென்று சொல்லிக் கொண்டே கைத்தொலைபேசியில் கவனம் செலுத்தகிறார்.அதறஇகு நோயாளி நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் உட்பட இருவர் கைதுசாப்பிடுகிற நேரம் உத்தியோகத்தருக்குரிய நேரம்.அவர் தனது நேரத்தில் என்ன செய்கிறார் என்பதை விசாரிக்கும் உரிமை நோயாளிக்கு இல்லை.உத்தியோகத்தர்களும் எல்லாரும் பார்க்கத்தக்கதாக பொது இடத்திலிருந்து சாப்பிடாமல் கதவை மூடி அறைக்குள்இருந்து சாப்பிடலாம்.அதை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.

மற்றைய அரச திணைக்களங்களைவிட காவல்துறை, கிராமசேவகர் அலுவலகங்கள், வைத்தியசாலைகள், தபால் நிலையங்கள் போன்றவற்றில்சாப்பாட்டு நேரங்களை உத்தியோகத்தர்கள் நேரங்களைப் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு சாப்பாட்டு நேர அளவு 45 நிமிடமென்றால் மருத்துவமனைகளில் நோயாளர்களுடன் நேரடித் தொடர்புளைப் பேணும் உத்தியோகத்தர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய ஒருவர் சாப்பாட்டு நேரத்திலிருக்கும் போது அதே தகுதியடைய இன்னொரு உத்தியோகத்தர் அதே பணியைச் செய்ய வேண்டும்.

உலகம் நவீன வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.டிஜிற்றல் உலகத்தை; தவிர்த்து அன்றாட வாழ்வையே நகர்த்த முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் புதிய நீட்சியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

பணியாலை களைத்துப் போய் வீட்டுக்கு வரும் குடும்பத் தலைவி இனிக் கடைக்குப் போக வேணுமே என்று யோசிக்கும் போது நவீன உலகம் ஒன்லைனில் பொருட்கள் உன் வீட்டுக் கதவடிக்கு வரும் என்று சொல்லி கையில் வைத்திருக்கும் கைத்தொலைபேசியிடம் சொல்லு என்று என்;று நினைவூட்டுகின்றது.அத்தடன் சமைக்க ஆர்வமில்லையென்றால் சாப்பாட்டுக்கு ஓடர் செய் என்கிறது.

அத்தலைவி கைத்தொலைபேசியில் தகவல் அனுப்பிய அரைமணித்தியாலத்தில் அவளின் வீட்டுக் கதவின் மணிச்சத்தாம் கேட்க சமையல் பொருட்களை அல்லது சாப்பாட்டினைக் கையளிக்கிறான் அதன் பணியாளன்.இ.னவருங்காலத்தில்: இதைத் தவிர்த்து நீங்கள் ஓடினாலும் உங்களை முந்திக் கொண்டு ஒன்லைன் உலகம் உங்களை முந்தி ஓடித் தாண்டி உங்கள் முன்னால் வந்து நின்று எங்கை ஓடுகிறாய் என்று விழுந்து விழுந்து சிரிக்கும்.
நிலைமை இப்படி இருக்க இலங்:கையில் ஒரு பொது வைத்தியசாலையில் !இஞ்சை கொண்டு வா அந்தக் கொப்பியை ‘ என்று கொப்வபியில் அப்பெகாயின்ற்மென் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.எழுதலாம் அதை கணிணியிலும் பதிந்து அப்பொயின்ற்மென்ற் விபரத்தை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுக்கலாம்.

எனக்கு என்ன வியப்பென்றால் 1963 ஆம் ஆண்டு மகாஜனாவில் படித்துக் கொண்டிருந்த போது திரு.பரமேஸ்வரன் என்ற தாவரவியல் (பொட்னி) மாஸ்ரர் சொன்னார்,இலங்கை உலக வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 300 வருடங்கள் பின்தங்கி நிற்கின்றது என்று.

அப்பொழுது தமிழகத்தைவிட ஏன் இந்தியாவைவிட ஏன் சிங்கப்பூரைவிட முன்னணியில் இருந்தது. சிங்கப்பூர் 1953இல் பிரிந்து 10 வருடங்கள் ஆகியிருந்தது. தடிகளை நட்டுக் கட்டிய வீட்டில் இருந்து கொண்டு மரவள்ளிக் கிழங்கையே சாப்பிட்டுக் கொண்டேயிருந்த மனிதர்களை நவீன உலகத்துக்கு கொண்டு வந்தான் நவீன யுகவாரிதி லீ குவான் யுங்.உலகம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறது இது எப்படிச் சாத்தியமானது என்று.அங்கும் மூன்று மொழிகள் இருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *