பலதும் பத்தும்

முக்கிய மைல்கல்லை எட்டிய யாழ் சர்வதேச விமான நிலையம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது.

மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று முக்கிய மைல்கல்லை எட்டிய யாழ் சர்வதேச விமான நிலையம் | Jaffna International Airport Reaches Milestone

குறித்த விமானம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது.

குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும் , பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button