முச்சந்தி
உக்ரைனில் எலான் மஸ்கின் டிஜிட்டல் சரிவு!… ஸ்டார்லிங்க் உக்ரைனை இருளில் மூழ்கடிக்கிறது !…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

கருங்கடலில் ரஷ்யக் கப்பல்கள் மீதான தாக்குதலில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவதால் இந்த இணைய முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொன்று மார்ச் 2025இல் உலகளவில் முடங்கிய X (formerly Twitter) தளத்தின் மீது உக்ரைன் பகுதியிலிருந்து நடந்த சைபர் தாக்குதல் என்றும், உள்ளக உளவு அமைப்புகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
ரஷ்ய வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலின் சில பகுதிகளில் ஸ்டார்லிங்க் சேவையை முடக்க மஸ்க் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் X (ட்விட்டர்) சைபர் தாக்குதலால், மார்ச் 2025இல் உலகளவில் X தளம் செயலிழந்தது. இதற்கு உக்ரைனில் இருந்து நடந்த ஒரு பெரிய சைபர் தாக்குதலே காரணம் என்று மஸ்க் குற்றம் சாட்டினார்.
ரஷ்ய புலனாய்வு தொழில்நுட்பம்:

தற்போது ரஷ்யா இலத்திரனியல் மின்னணு உயர் நிலத்தைக் கைப்பற்றியதால் (Electronic High Ground) உக்ரைனின் போர் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புலனாய்வு தொழில்நுட்ப வல்லுநர்களால் உக்ரைன் நாட்டின் மின்னணு உயர்நிலையை அழித்ததால் உக்ரைனின் போர் முயற்சி தோல்வியை நோக்கி சரிவதாக மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் டிஜிட்டல் நரம்பு மண்டலத்தை (Digital Collapse) அகற்றியதால், தொழில்நுட்ப தளத்தில் கட்டமைக்கப்பட்ட நவீன இராணுவத்தின் தீவிர பலவீனத்தை அம்பலப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் போரின் விளைவுகளுடன் கூடிய ஒரு மூலோபாய இருட்டடிப்பில் தடுமாறி வருகிறது.
ஆரம்பத்தில் 2022இல் எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) தொழில்நுட்பம் உக்ரைனின் மிகப்பெரிய போர்க்கள நன்மையாகத் தொடங்கியது. இப்போது அதன் மிகவும் ஆபத்தான பாதிப்பாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உக்ரேனிய ட்ரோன்கள், பீரங்கி அலகுகள், உளவு குழுக்கள் மற்றும் கட்டளை இடுகைகள் ஸ்டார்லிங்கின் கீழ் சீராக செயல்பட்டு வந்தன.
ஆனால் ரஷ்யா அதனை முறையாகப் படிப்பதற்கும், நெரிசல் செய்து தடை செய்வதற்கும், ஏமாற்றுவதற்கும், இப்போது பல முனையங்களை அழிப்பதற்கும் முயன்று கொண்டிருக்கிறது.
உக்ரைனின் ஆயுத பிரிவுகள் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த வீழ்ச்சி மறுக்க முடியாததாக மாறியது என்று கூறுகின்றன. ஆனால் ரஷ்ய மின்னணு-போர் திறன்கள் முழு உக்ரைனில் ஸ்டார்லிங்க் தொடர்பை தகர்க்கத் தொடங்கின.
இதனால் படைப்பிரிவுகளால் முழுமையாக ஒருங்கிணைக்கவோ செயல்படவோ முடியவில்லை. காடுகள் மற்றும் அகழிகளில் மறைந்திருக்கும் ஸ்டார்லிங்க் முனையங்களை ரஷ்ய தாக்குதல் குழுக்களால் இலகுவாக குறிவைத்ததாகவும், பல FPV ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
உண்மையில் உக்ரைன் நம்பியிருந்த கருவியையே தாக்குதலுக்கான தளமாக ரஷ்யா மாற்றியுள்ளது.
கடந்த ஜூலை 2025 இல், உக்ரைனின் பெரும் பகுதிகள் திடீரென ஸ்டார்லிங்க் அணுகலை இழந்தபோது, பாரிய முறிவு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டது. ஸ்டார்லிங்க் உள்கட்டமைப்பில் ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்புத் தாக்குதல்களைத் தயாரிப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மஸ்க் சேவையை கட்டுப்படுத்தியதாக கீவ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் காரணம் எதுவாக இருந்தாலும், இதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தியது என்பதே உண்மையாகும். உக்ரேனிய ட்ரோன்கள் பல வானத்திலிருந்து குப்புற விழுந்தன. உக்ரேனிய பீரங்கி சுடப்பட்டும் குறிதவறின.
போர்க்களத்தில் பாரிய பின்னடைவு:

இந்த இணைய முடக்கம் ஆனது போர்க்களத்தில் ஏற்பட்ட பின்னடைவை விட அதிகம் என்று மூலோபாயவாதிகள் எச்சரிக்கின்றனர். இது ஒரு புவிசார் அரசியல் முறிவு ஆகும். போரில் ஒரு இறையாண்மை கொண்ட நாடு அதன் முக்கிய இராணுவத் தகவல் தொடர்புகளை ஒரு தனியார் பில்லியனரிடம் திறம்பட ஒப்படைத்தது. அதன் ஆபத்து கணக்கீடுகள் இப்போது ஒரு முழு நாட்டின் போரின் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளது.
போர்க்களத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த ரஷ்யா, அதன் நன்மையை உணர்ந்து செயல்படுகிறது. மேலும் உக்ரைனின் டிஜிட்டல் முதுகெலும்பு உடைந்து வருவதால், மாஸ்கோவின் இலத்திரனியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. உக்ரேனிய இராணுவம் போரை மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
2022 இல் எலான் மஸ்க் உதவி:
போரில் 2022ம் ஆண்டு மிகவும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்த முன் வந்தார். அதாவது செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் ‘ஸ்டார் லிங்க்’ இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரஷ்ய் படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி, அவற்றை உக்ரைக்கு வழங்குவதே தங்களது திட்டம் என எலான் மஸ்க் தெரிவித்தார். ரஷ்யாவின் படைகள் எந்ததாக்குதலை நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவையை நிறுத்த முடியாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.
3,000 Starlink டெர்மினல்களை இயக்க அவர் அனுமதி அளித்தார். உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன், எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம் உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்க பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பு:
SpaceX, பென்டகனுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்புக்கான அதன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது. இந்த ஒப்பந்தம், Starlink செயற்கைக்கோள் தொடர்பு அமைப்பின் பாதுகாப்பான பதிப்பிற்கான அணுகலை கணிசமாக விரிவுபடுத்தியது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைனின் கணிசமான எண்ணிக்கையிலான Starlink டெர்மினல்கள் – துல்லியமாக 2,500 – Starshield அமைப்புக்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்பட்ட அமைப்பு, வலுவான குறியாக்கம் மற்றும் தலையீடு எதிர்ப்பு உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கியது. இது சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உக்ரைனின் 500 டெர்மினல்கள் மட்டுமே Starshield ஐப் பயன்படுத்தும் சலுகையைப் பெற்றிருந்தன. மொத்த ஒப்பந்தம், இரண்டு ஒப்பந்தங்களாகப் பிரிக்கப்பட்ட 3,000 Starlink டெர்மினல்களின் சேவையை உள்ளடக்கியதாகும்.
உக்ரைனுக்கு இந்த வலுவான தொடர்பு கட்டமைப்பை வழங்குவதன் மூலம், சவாலான சூழ்நிலைகளிலும் கூட, முக்கியமான டிஜிட்டல் இணைப்பை பராமரிக்க தேசத்தை அதிகாரமளிக்க SpaceX இலக்கு வைத்தது.

இந்த மூலோபாய நடவடிக்கை, நவீன போர் மற்றும் தேசிய பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
தற்போது உக்ரைனில் எலான் மஸ்கின் டிஜிட்டல் சரிவானது, ஸ்டார்லிங்க் உக்ரைனை இருளில் மூழ்கடிக்கிறது என்றே கருதலாம். இதனால் தற்போது உக்ரைனின் போர் முயற்சிகள் பாரிய அளவில் பின்னோக்கி செல்கிறது என்று கூறப்படுகிறது.
![]()