உலகம்

சவுதி அரேபியாவை சுழற்றிய சூறாவளி; நொருங்கிய கட்டடங்கள்!

சவுதி அரேபியாவின் மதீனா மாகாணத்தின் யான்பு பகுதியில்  கடும் சூறாவளி ஏற்பட்டுள்ளது.

மதீனா மாகாணத்தின் யான்பு பகுதியில் வீசிய கடுமையான சூறாவளியால் கனமழை பொழிந்துள்ளது.

சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆங்காங்கே வீதிகளில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன. அத்துடன் கட்டடங்களும் பலத்த சூறாவளியால் நொருங்கின.

அன்றாட தேவைக்காக கடைகள், அலுவலகங்களுக்குச் சென்ற மக்கள் ஆங்காங்கே திணறி ஓடினர்.

சூறாவளியை அடுத்து மீட்பு பணியாளர்கள் களமிறக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யான்பு பகுதியை தொடர்ந்து நப்த் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜித்தா வரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூறாவளி அனைத்துப் பகுதியையும் புரட்டிப் போட்டதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சூறாவளி தொடர்பான காட்சிகள் வெளிவந்து மக்களை திணறவைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *