கட்டுரைகள்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மை முகம்…. ஏலையா க.முருகதாசன்

இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் போது,அவர்கள் வட கிழக்கையும் மலையகப் பகுதிகளையும் இன்னும்,கொழும்பு வாழ் தமிழர்களிடமிருந்து தாம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற காரணத்தினால் தேர்தல் காலங்களில் வெற்றியடைந்தவர்களையும் அது குறிக இகும்.

அவர்களின் அரசியல் நகர்வுகளை நோக்கும் போது,தமிழர்கள் என்ற ரீதியில் தமிழர்களுக்காகவும்; இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள என்றுதான் கருதப்படுவார்கள்; அதுவே நிஜக்கூறுமாகும்.

இவர்கள் இலங்கையில் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த ஊல்களுக்கெதிரான அரசின் பொது நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா என்ற ரீதியில் கவனிக்கும் போது,இதுவரை காலமும் தமிழர்களை முதலீடாக வைத்து அவர்கள் செய்த அரசியல் வியாபாரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் என்போர் யார் என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது.உலக அரசியலில் அது எந்த நாடாக இருந்தாலும் போலி அரசியல்வாதிகளும் கொடுமையான அரசியல்வாதிகளம் மக்களால் தூக்கி எறிப்படுவார்கள் என்பகதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
அண்மைக் காலங்களில், இன்றைய இலங்கையரசு முன்னாள் ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்காவக்கு எதிராக அவரை சிறைவரை கொண்டு சென்ற ஊழலான அவரின் மனைவியின் கல்வி சம்பந்தப்பட்ட பட்டமளிப்பு விழாவுக்கு தனிப்பட்ட முறையில் இலண்டனுக்குச் சென்று வந்த விமானப் பயணம் தொட்டு உயர்தர தங்குமிட வசதிகள் இன்னு இன்னோரன்ன அதுசார்ந்த செலவுகள் அத்தனையையம் அரச செலவாக கையாளப்பட்டதைக் கவனத்தில் கொண்டு அந்த ஊழலுக்கெதிரான அரச நடவடிக்கை சரியானதே என்று எந்தவொரு தமிழரசியல்வாதிள்கூட அரசையும்: ஜனாதிபதியான திரு. அநுரகுமார திஸநாயக்காவைப் பாராட்டவுமில்லை.

தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் நிபந்தனையின்றி ஆதரவு - pathivu

இந்த ஊழுலகுக் கெதிரான கருத்துக்களைப் பொதுமக்கள் பகிர்ந்து கொண்டதுடன், ஜனாதிபதியையும் பாராட்டியிருந்தனர். அரசின் பணத்தில் ஒரு சதத்தையேனும்,எவராவது சொத்தச் செலவுக்காக பயன்படுத்தினாலே அது களவுக்குச் சமனாகும்.

மடியில் கனமில்லையெனில் வழியில் பயமில்லை என்ற பழமொழி மக்கள் மத்தியில் புழக்கத்தில் உண்டு.இது மடியில் பொருள் எதுவுமின்றி பாதையில் பேகாகிறவர்களுக்கு திருடர்கள் அதனை அபகரித்து விடுவார்களோ என்ற பயமிருக்காது.இன்னொன்று பொதுப்பணத்தை தனது தேவைக்குப் பயன்படுத்தி ஊழல் செய்யாதவனும் எவருக்கும் அச்சப்பட மாட்டான்.

ஆனால் தமிழரசியல்வாதிகள் எவருமே ரணிலுக்கெதிரான நடவடிக்கை மீது, அது சரியானதுதான் எனச் சொல்லத் துணிவற்று வாயைத் திறக்காமலிருந்தமைக்குக்: காரணம் அவர்களும் ஊழல்வாதிகள் என்பது மட்டுமல்ல,மக்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட கோடிப் பணங்களை,தனது தொகுதியில் எந்த அபிவிருத்திக்குச் செலவழித்தோம் என்பதையும் அதன் கணக்குகளையும் பொதுமக்களின் பார்வைக்குச் சமரப்பிக்கத் தவறுவது என்பது அவர்களக்குக் கொடுக்கப்பட்ட பணம் தமது சொந்தச் செலவுக்கு கையாளப்பட்டுவிட்டது என்பதேயாகும்.

நேர்மையான அரசியல்வாதிகளெனில் அபிவிருத்திக்க என அரசால் கொடுக்கப்பட்ட பணத்தின் விபரத்தை தொகுதி மக்களுக்குப் பகிரங்கமாகத் தெரிவித்து,அந்தப் பணத்தில் முன்னெடுத்த அபிவிருத்தியின் இயற்பியல் நிலையை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்து அதற்காகச் செலவழித்த செலவின் ஒவ்வொரு சதத்துக்கும் கணக்குக் காட்டி வரவு செலவு விபரம் ஒவ்வொரு பொதுமகனின் கைகளிலும் இருக்கத்தக்கதாக நேர்மையாக நடந்திருப்பார்கள்.
இனிவருங்காலத்தில் தமிழரசியல்வாதிகள் தமது தொகுதிக்கு அரசால் கொடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணத்தின் வரவு செலவு விபரத்தை தொகுதிமக்கள் அனைவருக்கும் போய்ச்சேரும் வகையில் அவர்கள் நேர்மையாக நடப்பது மட்டுமல்ல அதற்கான புதிய வரையறைச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இன்னொரு விடயமாக நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு தொகுதிக்கும் மதுபானக் கடை வைப்பதற்கான அனுமதியை அந்தந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கே கொடுக்கப்படுகின்றது என்ற நடைமுறையில்,இதுவரை காலமும் இந்த நடைமுறை பற்றி எ;தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடமுமிருந்தும் எனக்கு அரசு மதுபானக் கடை அனுமதியினை தந்தது,எனது தொகுதியில் கேள்விப்பத்திரமுறையில் இவருக்குக் கொடுத்தேன் என்ற வெளிப்படைத் தன்மையான அறிவித்தல் எதுவும் வரவில்லை.
வியாபாரத்தில்,வியாபாரத்தை நடத்துபவர்களுடன் வியாபாரத்தை நடத்த அனுமதிப் பெற்றுக் கொடுப்பவருடன் ஒரு ஒப்பந்தம் வைத்திருக்க சாத்தியமுண்டு.

அதிலும் எல்லா வியாபாரத்தையும்விட மது சம்பந்தப்பட்ட அதுவும்,Chief minister of Tamil Nadu – நிலாந்தன்.கொம் குடிப்பழக்கமுள்ளவர்களால் நினைக்கும் தோறும் ஆசையைக் கிளப்பிவிடும் மேல்நாட்டு குடிவகைகளையும் விற்பனை செய்யும் ஒரு மதுச்சாலை என்றுமே நட்டத்தில் இயங்க வாய்ப்பில்லவே இல்லை.

எனவே எவருக்கு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுச்சாலைக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாரோ அவருடன் இரண்டுவிதமான ஒப்பத்தந்தை இரகசியமான முறையில் எழுத்துமூல ஒப்பந்த அடிப்படையில் செய்திருக்க முடியும்.

1.மாதாந்தம் வரும் வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தனக்குத் தரவேண்டும் என்பது,

2.விற்பனை செய்யப்படும் நாளாந்த வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வீதத்தை தனக்கு தர வேண்டுமென்பது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் அரச வணிகச் சட்டங்களுக்கு உட்பட்ட உத்தியோக பூர்வமானவையல்ல.இவை அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வியாபாரிக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட எழுத்துமூலமான இரகசிய ஒப்பந்தமாகும்.இந்த ஒப்பந்தத்தை அந்தக் குறிப்பிட்ட மதுசாலை வியாபாரி மீறாதிருக்க,மீறினால் உனது இந்த அனுமதிப்பத்திரம் நீ விற்பனையில் ஊழல் செய்தாய் என இரத்து செய்யப்படும் அல்லது அடுத்தமுறை உனக்கத்தரப்படாது என மெதுமிரட்:டல் கலந்த எச்சரிக்கை நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரிக்கு உட்படாத ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாகப் போய்க் கொண்டிருக்கும்.

தமிழர்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு வந்து கதைத்தும்,கதை அளந்தும் கொண்டிருக்கம் இவர்கள் தமக்கு வாக்களித்த தமிழர்களுக்க அரசியல் என்றால் என்னவென்று தெரியாது.அதிலும் அவர்களுக்கு கைபிடித்து அ னா ஆவன்னா சொல்லிக் கொடுக்கப்பட வேண்டியவர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.

President Anura Kumara and TNA Discuss New Constitution, Elections, and  Developments | Colombo Gazette

போதைப்பொருள் விற்பனையில் இலங்கைத் தீவு,போதைப் பொருளஇ கழஞ்சிய அறையாக உருப்பெற்றுவிட்டதையும் நாளைய இலங்கையை வழிநடத்த வேண்டிய இளைய சமூதாயம் அதற்க அடிமையாகி,ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவலப்பட்டு நிற்பதையும்,போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் தமது பிள்ளைகளை நினைத்துக் கலங்கித் தவிப்பதையம்,அதிலும் பெண்பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதையும் கவனத்தில் எடுத்து,போதைப்பொருள் ஒழிப்பினை பாரபட்சமற்ற முறையில் மேற்கொண்ட அரசின் நடவடிக்கைகளை எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளுமே பகிரங்கமாகப் பாராட்டவுமில்லை,அரசின் போதைப் பொருள் நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தருகிறோம் எனச் சொல்லவும் இல்லை.

மக்கள் மீதான அக்கறை கொண்டவர்களாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமில்லை.இனவாதத்தை மூலதனமாக்கி அரசியல் வியாபாரம் செய்து வருகிறனர்.
வெளிநாடுகளிலும் உள்நாடான இலங்பையிலும் இவர்களின் விற்பனைப் பொருட்களாக இருப்பவை திரு.வே.பிரபாகரன் பெயர்,தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயர்,மாவீரர்கள்,புலிக் கொடி என்பவையே.

அதுதான் இவர்களின் மூலதனம்.தமிழர்கள்,தமிழ்ப்பற்ற என்ற போர்வைக்குள் நாடாளுமன்ற கதிரைகளுக்காக தம்மைத் தற்காத்து சிங்கள தமிழ் உறவைச் சித்தரிக்கும் இந்த இனவெறிபிடித்த தமிழ் அரசியல்வாதிகளை தமிழர்கள் புறக்கணித்தேயாக வேண்டும்.
மதமதம் பிடித்த ஒருசில புத்தபிக்குகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடேயில்லை.
இனவாதம் பேசும் இரு பகுதியினரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *