உலகம்

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு, அவசரகாலநிலை பிறப்பிப்பு!

இந்தோனேசியாவில் தொடரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 3000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 78 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவு மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள
நிலையில் உதவி தேவைப்படுபவர்களை அணுகுவதில் பாரிய சவால்கள்
ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி சவாலான சூழ்நிலை காரணமாக ஆச்சே (Aceh) மாகாணத்தில்
அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *