பலதும் பத்தும்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது

வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் ஆலயத்தை சூழ நின்ற மரங்களும் பாறி விழுந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (30) கருத்து தெரிவித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவில் சில பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

45ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ள்தில் மூழ்கியுள்ளதால் அவை முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது” என கூறியுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button