பலதும் பத்தும்

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் விசேட பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்போது விமான நிலையத்திற்கு வருவதற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாக குறிப்பிட்டு, பயணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சவாலான காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயணிகள் விமான நிலையத்திற்கு பார்வையாளர்களை அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடுமையான வானிலை காரணமாக தொடர்ந்து சிரமங்கள் ஏற்பட்டாலும், தடையற்ற செயல்பாடுகளைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button