பலதும் பத்தும்

6000 விமானங்களை மீளப்பெறும் ஏர்பஸ் நிறுவனம்

ஏர்பஸ் நிறுவனம் சுமார் 6,000 விமானங்களில் மென்பொருள் மாற்றங்களைச் செய்யக் கோரியுள்ளதால், விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் A319, A320, மற்றும் A321 ரக விமானங்களில் இந்த மென்பொருள் சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது.

இவ் விமானங்களுக்கு ​தீவிர சூரிய கதிர்வீச்சினால் (intense solar radiation) விமானக் கட்டுப்பாடுகளுக்குத் (flight controls) தேவையான தரவு சிதைக்கப்படலாம் (corrupt data) என்று கண்டறியப்பட்ட ஒரு சமீபத்திய நிகழ்வு இதற்கு முக்கிய காரணம்.​

மற்றும் பெரும்பாலான விமானங்களுக்கு, தேவையான மென்பொருளை
புதுப்பிப்பதற்கு 2 முதல் 3 மணிநேரம் ஆகலாம். இருப்பினும், சில
விமானங்களுக்கு புதிய மென்பொருளும் தேவைப்படலாம், இதனால் கூடுதல்
தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம்
(EASA) பாதிக்கப்பட்ட விமானங்களுக்கு விமானத் தகுதி உத்தரவை (air
worthiness directive) வெளியிட ஏர்பஸ் கோரியுள்ளது.

​இதன் காரணமாக, சில விமான நிறுவனங்களின் விமான சேவைகளில்
தாமதங்கள் அல்லது ரத்துகள் ஏற்படக்கூடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ (IndiGo) மற்றும்
ஏர் இந்தியா (Air India) ஆகியவையும் இதனால் பாதிக்கப்பட
வாய்ப்புள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button