உலகம்

தொழிற்கட்சியின் வாக்குறுதியை சவால் செய்யும் பிரித்தானிய வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் அறிக்கை!

தற்போதைய நிலையிலேயே செலவு தொடர்ந்தால், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு மேலதிகமாக 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் செலவினை சந்திக்க நேரிடும் என்று நாட்டின் வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம் (OBR) ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையில் எச்சரித்துள்ளது.

வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் இந்த அறிவிப்பானது பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் குறித்து கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அடுத்த தேர்தலுக்குள் ஹொட்டல்களில் புகலிடம் தேடுவோரை தங்க வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், புகலிடச் செலவை 1.1 பில்லியன் பவுண்ட்ஸ் ஆக குறைப்பதுக்கும் தொழிற்கட்சியின் உறுதிமொழிக்கு இந்த அதிர்ச்சியூட்டும் கணிப்பு பெரும் அடியாக வந்துள்ளது.

புகலிடம் கோருபவர்களுக்கு ஹொட்டல்களைப் பயன்படுத்துவதை உள்துறை அலுவலகம் முற்றிலுமாக நிறுத்தும் என்றும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டில் புகலிடச் செலவு 1.1 பில்லியன் பவுண்ட்ஸ் குறைந்து 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் ஆக இருக்கும் என்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் உள்துறை அலுவலக செலவின மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் அறிக்கை, கடந்த ஆண்டை விட சிறிய படகுகள் மூலம் நாட்டுக்கு வரும் குடியேறிகள் மற்றும் ஆதரவு தங்குமிடங்களில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை முறையே 19% மற்றும் 8% அதிகரித்துள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த அறிக்கையானது புகலிடக் கோரிக்கையாளர்களின் விடயத்தில் தொழிற்கட்சியின் துணிச்சலான வாக்குறுதிகளை சவால் செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *