உலகம்

ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் சீனாவில் 11 பேர் உயிரிழப்பு!

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) இன்று (27) ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியில் நாட்டில் பதிவான மிக மோசமான ரயில் விபத்தாகும்.

நகரின் லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் வளைப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் மீதே குறித்த ரயில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் ஒரு அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் ரயில் வலையமைப்பு உலகின் மிகப்பெரியது, 160,000 கி.மீ.க்கும் அதிகமான தூரம் நீண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பயணங்களை முன்னெடுக்கிறது.

சீனாவின் ரயில்வே அதன் செயல்திறனுக்காகப் பாராட்டப்பட்டாலும் கடந்த தசாப்தங்களில் சில மோசமான விபத்துக்களை சந்தித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர்.

2021 ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாணமான கன்சுவில் லான்சோ-சின்ஜியாங் ரயில் பாதையின் ஒரு பகுதியில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *