இன அழிப்பின் பின்னால் இருந்த ஜே.வி.பி. தமிழ் தேச விரோதிகள்

தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும்,இன அழிப்பிற்கும் தத்துவார்த்த ரீதியாக,தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜே .வி.பி.யினர். தமிழ் தேச விரோத கொள்கைகளைக் கொண்ட இந்த நபர்கள் இன்று தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் ஏதோவொரு வகையில் கதைத்து,பேசி.தூக்கிப்பிடித்துக்கொண்டு வடக்கு,கிழக்கிற்குள் காலூன்ற முயற்சிக்கின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இன்று ஈழத் தமிழ் தேசத்தினுடைய தேசியத்தலைவர் மட்டுமல்ல உலகத்த தமிழருடைய தலைவருமான பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் .தேசியத்தலைவரின் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் மிக மோசமாக விமர்சித்து கேவலபடுத்திய தரப்புக்களில் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கக் கூடிய ஜே .வி.பி.பி .பிரதான இடத்தைப்பெறுகின்றது
மஹிந்த ராஜபக்ச தரப்பு இனவாதம் பேசியபோது தமிழினத்திற்கு எதிராக,தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு ,இன அழிப்பிற்கு தத்துவார்த்த ரீதியாக,தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜே .வி.பி.
இவ்வாறான நிலையில் தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய போராளிகளுக்கு வட ,கிழக்கில் அஞ்சலி செலுத்துவதற்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும் தா ங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக வட .கிழக்கு தமிழ் மக்களுக்கு காட்டிக்கொண்டு தெற்கிலே அதற்கு நேர்மாறான கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலே இன்றுள்ளது.
இதில் பிரதானமாக செயற்படும் நபராக கடற்தொழில் அமைச்சர் உள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு அவர் நேரடியாக சென்றிருந்தார். ஜே .வி.பி. போன்ற தமிழ் தேச விரோத கொள்கைகளைக்கொண்ட நபர்கள் இன்று தேசியத்தலைவரின் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அதே தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் ஏதோவொரு வகையில் கதைத்து,பேசி.தூக்கிப்பிடிக்கின்றனர் ஏனெனில் தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் பற்றிபேசாது வடக்கு,கிழக்கிற்குள் நுழைய முடியாது. அப்படியானால் எந்தளவு தூரத்திற்கு தமிழ் தேச விரோத தத்துவங்களைக்கொண்ட தரப்புகள் தோல்வியடைந்துள்ளன என்பதனை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
![]()