கிலிப் பேரணி… ஏலையா க.முருகதாசன்

நுகேகொடை பேரணியின் அடிப்படை அம்சம் இதுதான்.இதுவரையில் கடந்தகாலங்களில் ஆட்சி செய்த எந்த அரசுகளுக்குமே இன்றைய ஜனாதிபதி திரு.அநுருகுமார திஸநாயக்காவின் அரசுக்கு ஆதரவு கொடுத்தது போல தமிழர்கள் கொடுக்கவில்லை.
வடக்கு கிழக்குத் தொட்டு மலையகம் வரை இந்த அரசுக்கு நாளுக்கு நாள் தமிழ் மக்களின் ஆதரவு பெருகி வருவதை பேரணி நடத்தியவர்களும் அவருடன் கூட்டணி வைத்துக் கொண்டவர்களாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.எதிர்காலத்தில் இலங்கை மக்களனவைருமுஇ சமரசம் சமாதானம் என்ற நிலைக்கு வந்தும் தம்மை இலங்கையர் என மட்டுமே அடையாளப்படுத்திவிடுவார்களானால், தாங்கள் அரசியலில் செல்லக்காசாகிவிடுவோமோ என அச்சம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் பேரணி பசுத்தோல் போர்த்திய மதவாத இனவாத வெறியர்களால் நடத்தப்பட்ட இனவாதப்: பேரணியேயாகும்.இருக்கிற அரசியல்வாதிகளுக்குள் திரு.நாமல் இராஜபக்சாதான் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடியவர் தான் மட்டுமே என அவர் கற்பனையில் திளைத்துள்ளார்.
போகிற போக்கைப் பார்த்தால் திரு.அநுரகுமார திஸநாயக்கா அரசு இன்னும் இருபது வருடங்களுக்காவது ஆட்சியிலிருக்கும் என்ற அச்சம் இவர்களைப் பிடித்து ஆட்டத் தொடங்கியுள்ளது.
தமிழர் பகுதிக்கான முதல் கூட்டத்தை திரு.அநுரகுமார திஸநாயக்கா வல்வெட்டித்துறையை உள்ளடக்கிய வடமராட்சிப் பகுதியைத் தேர்ந்தெடுத்து நடத்திய போது அக்கூட்டத்துக்குத் திரண்டிருந்த மக்களைப் பார்த்த இவர்களுக்கு திகைப்பும் அச்சமும் ஏற்பட்டுவிட்டது.
வடமராட்சி என்றால் அது திரு.வே.பிரபாகரனையே நினைவுக்கு கொண்டுவரும் பிரதேசம் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.மாவீரர்களை வணங்கும் அதே மக்கள்தான் திரு.அநுர குமார திஸநாயக்கா அரசையும் ஆதரித்து நிற்கிறார்கள்.
இது ஒரு புதிய அரசியல் சிந்தனை.வடக்கு கிழக்குத் தமிழர்கள் எது சரி எது பிழை என்பதையும் ஒரே அரசியல் பார்வை இருக்கக்கூடாது,காலத்தையம் சூழ்நிலையையும் அனுசரித்துப் போவதுதான் விவேகமானது என்பதை யோசித்து அதன் வழியில் செல்லத் தொடங்கிவிட்டனர்.அவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்,அது தமிழ்ப் பகுதியாக இருந்தாலும் அந்த நிலம் இலங்கைக்கள் உள்ளடக்கியதே அதனால் இலங்கையில் நடக்கும அரசியல் பொருளாதார எற்ற தாழ்வுகள் தங்களையும் பாதிக்கும்,தாங்களும் இலங்கையர்கள் என்பதும்,சரி பிழைகளை அரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்பதுடன் இன்று இலங்கையின் ஜனாதிபதியான திரு.அநுரகுமார திஸநாயக்காவின் புதிய அரசியல் நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில் பெருபான்மையான தமிழர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்து தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
ஒரு நல்ல தெளிவான அரசான இந்த அரசு நாடாளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி தமது நடவடிக்கைள் என்ன என்பதைத் தெளிவுபடக்கூறியும் அது தொடர்பான முன்னெடுப்பகளை எடுத்த போதும் மந்திரத்தால் மாங்காய் பிடுங்கலாந்தானே என்பது போல அரசை விமர்சிப்பதுக்கு காரணங்களைத் தேடியும் கிடைத்த உருப்படியற்ற கனாரணங்களை வைத்து உரத்த குரலில்: பேசி வருகின்றனர்.
எதிரணியினருக்கு மதவாதம்,இனவாதம் இல்லாத நாடு போதைப் பொருள் போன்ற அரசின் உறுதிப்பாடான செயல் பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.இது வெறும் எதிரணியனரின் சுயமான முடிவினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.இதற்கு பின்புலமாக அறிவுரையுடன் சூழ்ச்சியுடன் கூடிய திட்டமிடல் இருக்கின்றது என்பதை நிராகரிக்க முடியாது.
இந்தப் பேரணிக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த திரு.சரத்குமார்,திரு.திருமாவளவன் அத்துடன் இலங்கையின் பிரபலமான யூரியூப்பரை சந்தித்த இந்திய வியாபாரிகள்,இந்தியத் தூதுவரின் அழைப்பின் பேரில் அவரைப் போய்ச் சந்தித்த திரு.சுமந்திரன் திரு.சாணக்கியன் ஆகியோர் எனக் கூட்டிக் கழித்தப் பார்த்தால் இந்தப் பேரணிக்குப் பின்னால் இந்தியாவின் திட்டமிடலும் பின்புலமும் ஏன் இருந்திருக்காது என எண்ணத் தோன்றுகின்றது.
உலகிலேயே அமெரிக்காவின் சிஐஏக்கு அடுத்ததாக ஏன் அதிலும் பார்க்க உளவு அமைப்புகளில் எங்கும் பரவி நிற்பதும் அடைமழை பெய்யும் போது தீக்குச்சி நெருப்பைக் கோண்டு போகும் உளவு வல்லமை இந்தியாவின் றோவிடம் இருக்கின்றது.
திரு.தொல் திருமாவளவன் திடீரென இலங்கைக்கு வந்து வடபகுதிக்குச் சென்று அங்கு கிட்டுப் பூங்காவில் மாவீரர் நாளை முன்னிட்டு கார்த்திகை முன்னிறுத்திய கூட்டமொன்றில் பேசியிருக்கிறார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கொள்கை இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதையும் தமிழர்கள் அதைக் கைவிடவில்லையென்பதையும் காட்டி இந்த அரசும் தமிழர்களுடன் மீண்டும் வன்முறைச் சிந்தனையைக் கொள்ள வேண்டுமென்பதே காரணமாகும்.
திரு.தொல்.திருமாவளவன் இந்தியப் புலனாய்வுப் பிரிவில் புலனாய்வளராக வேலை செய்தவர்-இந்திய பலனாய்வுப் பிரிவு இன்னொரு வகையான புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
தமது புலனாய்வுப் பிரிவில் வேலை செய்து வந்த ஒருவர் வேலையைவிட்டுப் போவது போல போக்குக் காட்டிவிட்டு அவர் அந்த வேலையைச் செய்யும் உத்தியோகப் பற்றற்றவராக வைத்துக் கொள்வார்கள்.அவருக்கு சம்பளம் உட்பட புலனாய்வத் தகவல்களுக்கு ஏற்ப அவர்களுக்க அதற்கான சம்பளத்தையம் கொடுப்பார்கள்.
இது போன்ற ஒரு நடவடிக்கையைத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் ஜனாதிபதி திரு.பிரேமதாசாவின் தற்கொலைத் தாக்குதலில் மேற்கொண்டார்கள் என்பதை அது நடந்த சமயத்தில் பரவலாகப் பேசிக் கொண்டார்கள்.
இக்கட்டுரையை வாசிப்பவர்களும் இதற்கு முன்னர் இது போன்ற கட்டுரையை வாசித்தவர்களும் நான் தொடர்ந்து இந்தியாவைச் சாடியும் விமர்சித்தும் வருகிறேன் என நினைக்கலாம்.
ஆனால் இலங்கையில் ஏற்பட்ட தமிழர்களுக்கான அத்தனை அவல நிலைக்கும்,ஆயுதப் போராட்டம் தொடங்கியதற்கும் இந்தியாதான் காரணமென்பது எள்ளளவும் கற்பனையல்ல.அது வரலாற்று ஆய்வாளர்கள்,சரித்திரப் பேராசிரியர்கள் நுண்ணிமையுடன் கவனித்து வரும் தலைசிறந்த ஊடகவியலாளர்கள் தொட்டு சாதாரண பொதுமக்கள் வரையும் தெளிவறத் தெரியும்.
இந்தியாவின் சொல் கேட்டுத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் நடக்கிறார்கள் என்று கருத்துச் சொன்னவர்களின் கருத்து என்று உண்மையாகி வருகின்றது. திரு.மகிந்த இராஜபக்சா ஜனாதிபதியாக இருந்த போது திரு.தொல் திருமாவளவன்,திருமதி.கனிமொழி, திரு.டீ.ஆர் பாலு ஆகியோர் இலங்கைக்கு வந்து வடபகுதிக்குச் சென்ற போது அங்கு தமிழரசியல்வாதியொருவருடன் டீ.ஆர். பாலு கலந்துரையாடலின் போது எரிந்துவிழுந்த சம்பவம் அப்பொழுது பேசு பொருளாகியிருந்தது.
தமிழக அரசியல்வாதிகள்: தமிழீழ விடுதலைப்புலிகளைப் புகழ்ந்து பேசுபவர்கள்;,அவர்களின் தியாகங்களை கனிந்துருகிப் பேசுபவர்கள் என்பதால் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் நினைக்காதீர்கள்.
அது அவர்களின் உத்தியோகம்,இலங்கைத் தமிழர்களில் குறிப்பாக வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும்,அதன் தலைவரான திரு.வே.பிரபாகரன் மீதும் வைத்திருக்கும் ஈடுபாட்டை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பசப்பு வார்த்தைகளை றோவின் பணியாளர்கள் பேசுவார்கள்.ஒற்றர்களாக,புலனாய்வாளர்களாக வருவோர் தமிழர்களின் மனநிலை என்பதை தாம் தமிழர்களின் அனுதாபிகள் என்பது போல அவர்களின் மனநிலை அடுத்து அவர்கள் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என்பதை,தாங்களும் உங்களின் உரிமைக்குச் சார்பாதனவர்களே எனத் தூண்டிலைப் போடுவார்கள்.
இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக றோவுக்காக இயங்குபவர்கள் இப்பொழுது பணியில் இல்லை என்ற தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு அதனை மக்களை நம்புபடி வைப்பார்கள்.
திரு.தொல்.திருமாவளவனோ அல்லது திரு.சரத்குமாரோ அல்லது அந்த யூரியூப்பரோ தமிழர்களின் நடவடிக்கைபற்றியும் தாம் எடுக்கப் போகும் நடவடிக்கைபற்றியம் அவர்கள் சொல்வதைக் கேட்டும் கேளாத மாதிரியும் பட்டும் படாமலும் உள்வாங்கிக் கொள்வார்கள்.
வணிக நோக்கத்துக்கு வந்தவர்கள் ஏதோ பொழுது போக்கக் கதை கேட்பது போலவும்,தமிழருக்கு உதவி செய்ய வந்தோம் என்று வருபவர்கள்,உங்கள் வலிகளை உணருகிறோம்.உங்களுக்கான உரிமை பற்றி மத்திய அரசுடன் பேசுவோம்,நீங்கள் முன்பு போல மனம் தளராது ஒருமித்து ஒரே புள்ளியில் நில்லுங்கள்,இப்பொழுது இருக்கும் அரசை நம்பாதீர்கள்,சிங்களவர்கள் ஒரு போதும் உங்கள் உரிமையைத் தரமாட்டார்கள் எனச் சொல்லுவார்கள்.
அதைக் கேட்டு சாத்தியமான சாதகமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்கிய தமிழர்கள்,திரும்பி வேறொரு பாதையில் நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.
நுகேகொடைப் பேரணி நடைபெறுவதற்கக் காரணமே இந்தியாவின் றோதான் என்பதை நம்ப மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை.
இலங்கையில் தொடர்ந்து அரசியல் குழப்பமும்,இன முரண்பாடுகளும் இருக்க வேண்டுமெனில் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் இனவாதமும்,மதவாதமும்,தமிழர்கள் மத்தியில் நூர்ந்து அணைந்து போய்க்கொண்டிருக்கும் தனிநாட்டுச் சிந்தனையையும் நூரவிடாமல் வைத்திருக்க வேண்டும்.
அதை இந்தியாவின் புலனாய்வுத்துறை மிகச் சரியாகவே செய்து வருகின்றது.திரு.அநுராவின் சமகால அரசுக்கு தமிழர்கள் கொடுத்துவரும் மிதமான ஆதரவை எப்படிச் சிதைப்பது என்பதே இந்தியப் புலனாய்வுத்துறையின் இலக்கு.
திரு.தொல்.திருமாவளவனும்,திரு.சரத்குமாரும்,யூரியூப்பரைச் சந்திக்க வந்த வணிகர்களும் இந்தியாவின் புலனாய்வுத்துறையின் ஒற்றர்களேதான்.
திரு.அநுரகுமார திஸநாயக்காவின் நடவடிக்கைகள் தங்களையும பாதிக்கப் போகின்றது என்பதற்காக நடத்தப்பட்ட பேரணிக்கு அவர்களின் மதவாத இனவாத போக்கேதான் காரணம்.
தண்ணீர் ஓடுகிற பக்கத்தில் வாய்க்காலை வெட்டுவது என்பது புலனாய்வு அமைப்புகளின் அணுகுமுறை.

21.11.25 அன்று நுகேகொடையில் நடைபெற்ற பேரணியும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை,ஊழலுக்கெதிரான நடவடிக்கை போன்றவற்றை எதிர்த்து மதவாதம்,இனவாதம் ஆகிவற்றினை ஆதரிக்கும் பேரணியேயாகும்.இது அரசியலில் இனித் தலையெடுக்க முடியாது செல்லாக்காசாகி விடுவோமோ என்ற கிலியினால் ஏற்பட்ட பேரணியாகும்.
![]()