பலதும் பத்தும்

இந்தியாவில் அதிர்ச்சி; மூன்று வீடுகளில் தீப்பரவக் காரணமாகிய காகம்

இந்தியா – ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காகத்தின் செயலால் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வீடும், அதற்கு அருகில் இருந்த மூன்று குடிசைகளும் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகின.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் விளக்கேற்றப்பட்டு, அது வீட்டின் மேற்தளத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விளக்கில், மேல் பகுதியில் தூக்கிச் செல்லும் வகையில் கம்பி இணைக்கப்பட்டிருந்தது. ஒரு காகம் அந்த விளக்கைத் தூக்கிச் செல்ல முயன்றபோது, அது அந்த வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதன் காரணமாகவே அந்த வீடும் அதைச் சுற்றியிருந்த மூன்று குடிசைகளும் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதெனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவத்தில், குத்தகை விவசாயி ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. மேலும், அவர் கடனாக வாங்கி வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணமும் தங்க நகைகளும் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button