உலகம்

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதவேளை, . ஸ்ரீநகர் துணை ஆளுநர் அக்ஷய் லப்ரூ காயமடைந்தவர்களை வைத்தியசலையில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், காஷ்மீர் காவல் நிலையத்தில் , வெடி விபத்து இடம்பெற்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *