கட்டுரைகள்

“ஒற்றன்”… கட்டுரை ….. ஏலையா க.முருகதாசன்.

நடிகர் திரு.சரத்குமார் இலங்கைக்கு வந்திருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கென்று.

இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அவர் இந்திய அரசின் சார்பாக வந்தாரா அல்லது தன்விருப்பில் வந்தாரா ஆழ ஊடுருவிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இந்தியா சார்பாக, முன்னெடுக்கும் சுற்றுலாத்துறை என்பதாக இருந்தால், அது இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

அது போல இலங்கையின் சுற்றுலாத்துறை என்பது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது.
ஒரு அரசின் கீழ் இருக்கும் கட்டமைப்பு இன்னொரு அரசின் கட்டமைப்புடன்தான் பேச முடியும்,அது தொடர்பான அபிவிருத்திசார் இராஜதந்திர முடிவுகளை எடுக்க முடியும்.
அவர் ஒரு விடுதியை அமைக்க முடியுமாயின் அது ஒரு முதலீடாகும்.இலங்கையரசின் சட்டத்திற்கமைவான உபவிதிகளுக்கு கட்டுப்படுதல்,பல்வேறுநுபட்ட வாடகைகளைச் செலுத்துதல் ,வரி செலுத்துதல் ஆகியவை இவற்றுள் அடங்கும்.

அனைத்தையும் கொண்ட ஒரு நாடே இலங்கை; மனம் நெகிழ்ந்த நடிகர் சரத்குமார்! | SamugamMediaஅதே வேளை இலங்கைக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் அவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும் அல்லது அவர்கள் எத்hதரத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைக் கண்காணித்தேயாக வேண்டும்.

ஏனெனில் அனைத்து முகங்களுடனும் உளவாளிகள் சதியாளர்கள் சூழ்ச்சியாளர்கள் இலங்கைக்குள் மட்டுமல்ல எல்லா நாடுகளுக்குள்ளும் ஊடுருவிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஏல்லா நாடுகளையும்விட இந்தியா மீது இலங்கை ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இலங்கையில் ஒவ்வொரு ஆட்சி அமையும் போதும் ஆட்சியாளர்களின் வல்லமை,ஆளுமைஇலங்கையை வந்தடைந்தார் நடிகர் சரத்குமார் - Thinakaran போன்றவற்றை எடைபோட்டு அதற்கமைய இந்தியா தனது உளவு அமைப்பான றோ மூலமாக இலங்கையைக் கையாள்வது இன முரண்பாட்டுக்கான அரசியல் பிரச்சினைகளை உருவாக்குவது எழுந்திருக்க முடியாத அளவுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்குவது என சூழ்ச்சிகளை செய்து வருகின்றது.குறிப்பாக,மிக முக்கியமாக இலங்கையில் காணப்படும் சிங்களவர்,தமிழர் ,முஸ்லீம்கள் என்ற அரவர்களின் இனவாரியான சனத்தொகை அவரவர்களடைய சமயசார் வழிபாட்டு அடையாளங்கள்,பண்பாட்டு அடையாளங்கள்; போன்றவற்றை அவதானித்து அதற்கமையவே இலங்கையை இந்தியா கையாரண்டு வந்தது,கையாண்டு கொண்டிருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்ட அத்தனை பிரச்சினைக்கும் இலங்கைவாழ் மக்களின் பல்வேறுபட்ட இனக்குணாம்சங்களின் பலம் பலவீனம் போன்றவற்றை பல்வேறுபட்ட அறிவியல் நிபுணர்கள் ஆய்வுசெய்த அதன் வழியேதான் இலங்கையில் இன்றுவரை ஏற்பட்டு வருகின்ற அரசியல் இனக் குழப்ப நிலைகளை உருவாக்கியவர்கள் இந்தியாதான் என திடமாகக் கூற முடியும்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடிப்பதுகூட மீனவர்கள் கடல் எல்லையை அறியாது இலஙகைக் கடற்பரப்புக்குள் வந்து மீன பிடிக்கிறார்கள் என அசட்டை செய்ய முடியாது.

மீனவர்கள் அனைவரோடுமல்ல, உளவு நிறுவனங்கள் சில மீனவரோடு அல்லது அந்தந்தப் பகுதி அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு தற்செயலாக தவறுதலாக இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடிக்கச் செல்வது போல செல்ல வையுங்கள்,நாங்:கள் அதனூடாக இலங்கையில் குழப்பமான அரசியலை உருவாக்குவோம் எனச் சொல்லி,அதனை றோவுடன் தொடர்புடைய அவர்களின் விசுவாசிகள் நீங்கள் இலங்கைக் கடலுக்குள் போய் மீன் பிடிக்கலாம் எனச் சாதரணமாகச் சொல்ல தாங்கள் வல்லரசு நாடு இலங்கை ஒரு தீவு சுண்டங்காய் நாடு என அவர்களும் ; திமிருடன் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்க அடித்தளமாக சிங்கள,தமிழ் இஸ்லாமியத் தனியினம் என்ற முரண்பாடுகளை சதிக் கோட்பாடுகளாக பயன்படுத்தி வருகின்றது இந்தியா.

இந்தியா பக்கத்து நாடு எமது தொப்புள்கொடி உறவுத்தமிழர்கள் அங்கே இருக்கிறார்கள் என்ற நெகிழ்வுத்தன்மை கோட்பாடு தமிழர்களுக்குத் தேவையே இல்லை.

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் இலங்கைக்கு வருகை – Oruvan.comதாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பதே இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமுள்ள கோட்பாடாக இலங்கைத் தமிழர்கள் வரித்துக் கொள்ள வேண்டும்.

என்னதான் இருந்தாலும் சிங்களவர்களும் முஸ்லீம்களும் எமது அயலவர்கள் சகோதரர்கள் என்ற அடிநாதமான எண்ணம் தமிழர்களிடத்தில் இருக்க வேண்டும். அதனாற்றான் திரு.சரத்குமார் அவர்கள் சுற்றுலாத்துறையை மே;படுத்துவதற்காக இலங்கைக்கு வந்திருக்கிறேன் என்பதை முற்றுமுழுதாக நம்ப முடியவில்லை,சந்தேகத்துடன் பார்க்க வேண்டியுள்ளது.

நடிகர்கள் நடிகைகள் மீது காணப்படும் தமிழர்களின் ஈர்ப்பை இந்தியா சாதகமாக பயன்படுத்தும்.
எனது கருத்தாக உறுதியாக ஒருவிடயத்தை பதிவு செய்கிறேன் திரு.சரத்குமார் அவர்கள் இந்தியாவின் உளவுப் பிரிவு ஒற்றனாக ஏன் இருக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்.
ஏனென்றால் அவர் தமிழரென்றாலும் அவரும் ஒரு இந்தியனே.அவர் எப்பொழுதும் இந்தியாவுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்.

Loading

2 Comments

  1. இந்தியத் தமிழரிலும் இலங்கைத் தமிழரிடம் உள்ளார்ந்த அன்புகொண்ட தமிழரும் இலங்கைத் தமிழரிலும் இந்தியத் தமிழரிடம் உள்ள உள்ளார்ந்த அன்புகொண்ட தமிழரும் இருக்கின்றனர். இருபக்கங்களிலும் கூட இருந்து குழி பறிப்பவர்களும் இருக்கிறார்கள். தேசிய இனம் எனும் பொதுவான தொப்புள்கொடி உறவை குப்பையாக எண்ணாதீர்கள். உங்களுக்கு இந்தியத் தமிழரகன்றால் அரசியல் காரணத்துக்காக பிடிக்காமல் போகலாம். அரசியல்வாதிகளை வைத்து அனைத்து தமிழரையும் எடைபோடாதீர்கள். இது நட்பினூடன கருத்து மட்டுமே. மற்றபடி நான் கட்டுரையை குறைத்து மதிப்பிடவில்லை.

    அன்புடன்,
    சங்கர சுப்பிரமணியன்.

    1. அன்புடன் நண்பர் திரு.சங்கர சுப்பிரமணியம் அவர்களுக்கு,
      பணிவான வணக்கம்.
      தங்களுடைய கருத்துப் பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள இந்தியத் தமிழர்களுடன் இலங்கைத்; தமிழர்கள் என்றும் வாஞ்சையுடன் இருப்பவர்கள்தான்.
      அதற்கு உதாரணமாக இங்கே ஜேர்மனியில், எனது நகரத்துக்கு பல இந்தியர்கள் பணி நிமித்தமாக வந்திருக்கிறார்கள் அவர்களில் தமிழர்கள்,கன்னடக்காரர்,மகாராஷ்டிரக்காரர் ,மலையாளிகள் என பலரை நான் கடைகளில்,பேருந்துகளில் பார்ப்பதுண்டு.
      அவர்களைப் பார்க்கும் போது எமது அயலவர்கள் என்ற உணர்வு வந்து அவர்களைப் பார்த்து தலையையாட்டுவது, முறுவலிப்பது கலோ சொல்வது என நான் பிரதிபலிப்பதுண்டு.
      ஆனால் இவர்களில் தமிழர்கள் ஏனோதானோ என்று நடப்பார்கள்.ஆனால் கன்னடர்கள்,மலையாளிகள்,மகாராஷ்ரக்காரர்கள் கலோ என்பார்கள்.
      சில நாட்களுக்கு முன் ஒரு கன்னடக்காரரைச் சந்தித்த போது ஊருக்குப் போகிறேன் என்று சொன்னீர்களே,போனீர்களா என்று கேட்டேன் போய் வந்திட்டேன் என அவர் சொன்னதுடன் எனது சுகத்தையும் விசாரித்தார்.
      இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களை பெரிதாக மதிப்பதில்லை.அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் அகதியாக வந்தவர்கள் தாங்கள் பணிக்காக வந்தவர்கள் என்ற கர்வமும் காரணமாக இருக்கலாம்.
      இதனை 1979 ஆம் ஆண்டில் தலைமன்னார் வழியாகக் கப்பலில் இராமேஸ்வரம்வழியாக இந்தியாவுக்குப் போனபோது அங்கிருந்த கடைக்காரர் உங்கடை நாட்டில் சாப்பாடே இல்லை என் கேலி செய்தார்.
      அப்பொழுது நான் இலங்கை சொர்க்கபூமி என வர்ணித்து வணிகர்களாக இலங்கைக்கு வந்த செட்டிமார்களின் வரலாறும் மலையாளிகளின் வரலாறும் அவருக்குத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
      செட்டி வணிகர்கள ;கிட்டங்கிகளை அமைத்து (மண்டி) வணிகத்தில் ஏகபோக உரிமை கொண்டாடிய வரலாற்றை பலர் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
      மாவிட்டபுரம் என்ற ஊரில் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலின் காங்கேசன்துறை வீதியில் இரண்டு மலையாளிகள் தேநீர்க்கடை வைத்திருந்த வரலாறும் தெல்லிப்பழைச் சந்தியடியில் ஒரு மலையாளி தேநீர்க் கடை வைத்திருந்த வரலாறும் இந்த இணையத்தளத்தின் ஆசிரியரின் இடமான யாழ்ப்பாண நகரில் சுபாஸ் கபே எனத் தொட்டு ஆங்காங்கே மலையாளிகள் தேநீர்க்கடை வைத்திருந்தார்கள்.
      இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் இனத்தால் ஒன்று அவர்கள் மீது எமக்கு மரியாதையம் ஒருவிதப் பற்றும் உண்டு.அது பண்பாட்டு விழுமியம் மட்டுமே.
      தாங்கள் ஒரு தமிழராக இருந்தாலும் தாங்கள் ஒரு இந்தியர் என்பது தங்களை விட்டகலாத அடிநாதமாக இருக்கும்.
      இரு தமிழர்களின் அரசியல் வேறு பண்பாடு ஒன்றாகும்.மொழி ஒற்றமையும் பண்பாட்டு ஒற்றமையுமே இருக்க வேண்டும்.
      அரசியலில் இந்திய வல்லரசு இலங்கையை தனது ஆதிக்கத்தில் முழுமையாகக் கொண்டு வர முனைகிறது.
      அது தவறு, அதை ஒரு இலங்கையனாக எதிர்ப்பேன்.அயல் வீட்டுக்காரனிடம் போய் நீ இப்படித்தான் உடுக்க வேண்டும்,இப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்ல முடியுமா?.
      இலங்கையில் தமிழர்களுக்கிடையிலும் சிங்களவர்களுக்கிடையிலும் மனக்கசப்பை ஏற்படுத்திய நெம்புகோல் சூத்திரதாரிகள் இந்தியாவே.
      தாங்கள் எல்லாம் அறிந்த புத்திசீவி.உலக நாடுகளில் உள்ள தூதுவராலங்களின் தூதுவர்கள் தங்களுடைய நாடுகளின் உளவாளிகளாகவும் புலனாய்வாளர்களாகவும் பணிபுரிகிறார்கள் என்பது உண்மையே;அது தஙஇகளுக்கும் தெரியும்.
      அது போலவே இந்தியாவும் இலங்கை;கான தூதுவர்களைப் பயன்படுத்துகிறது.இலங்கையின் இந்த நிலைக்கு இந்தியாதான் காரணம் என்பது தவிர்க்க இயலாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *