மாகாண சபைத் தேர்தலுக்கு 1000 கோடி ரூபா ஒதுக்கீடு; நடத்துவது உங்கள் கைகளில்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் 10 பில்லியன்(1000 கோடி) ரூபாவை ஒதுக்கி உள்ளது .மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.கட்சித் தலைவர்கள் இணைந்து சரியான தேர்தல் முறையை உருவாக்கித் தந்தால் நாம் தேர்தல் நடத்தத் தயார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை நிகழ்த்துகையிலேயே இதனித்தெரிவித்த ஜனாதிபதி மேலும் பேசுகையில்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதுமாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கி உள்ளது.தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவே.கட்சித் தலைவர்கள் இணைந்து சரியான தேர்தல் முறையை உருவாக்கித் தந்தால் நாம் தேர்தல் நடத்தத் தயார் .அதற்காகவே 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டம் ஒன்று உள்ளது.எனினும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடையவில்லை. உங்களது அரசாங்கத்தில் எல்லை நிர்ணைய சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். எனினும் நீங்கள் அதை செய்யவில்லை.
தயாசிறி ஜயசேகரவும் அப்போது அமைச்சராக இருந்தார். எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்த போது இந்த நாட்டில் முதலாவது தடவையாக அதனை சமர்ப்பித்த பைசர் முஸ்தபா அமைச்சரே அதற்கு எதிராக கையுயர்த்தினார். அமைச்சரே கொண்டு வந்த அறிக்கையை அவரே தோற்கடித்தார் என்பதே விந்தை.
இப்போது எம்மிடம் மாகாண சபைத் தேர்தலை கேட்கின்றனர். இப்போது சட்டத்தில் இடமில்லை. நான் சட்டமா அதிபரிடம் அதற்காக சட்டத்தில் காணப்படும் இடம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன்.
விருப்பு வாக்கு தேர்தல் முறை வேண்டாம் என இங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். தேர்தலை எப்போது நடத்துவது என்பது நான் தீர்மானிக்க முடியாது.பாராளுமன்றமே அதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார்.
![]()