மக்களை ஏமாற்றி இருப்பை தக்க வைத்துக்கொள்ள ஐ.எம்.எப். தயாரித்த பட்ஜெட்! அதனையே ஜனாதிபதி வாசித்தார்

மக்களை ஏமாற்றி தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் வரவு செலவு திட்டமே சமர்பிக்கப்பட்டுள்ளது என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி வரைந்த வரவு செலவுத் திட்டமே.இதனையே ஜனாதிபதி வாசித்தார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கினால் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை தற்போது 2026 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.இவை மக்களை ஏமாற்றும் போலியானதொரு செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணங்கள் ஏதுமில்லை. மக்களை ஏமாற்றி தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் வரவு செலவு திட்டமே சமர்பிக்கபிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி வரைந்த வரவு செலவுத் திட்டமே.இதனையே ஜனாதிபதி வாசித்தார் என்றார்.
![]()