கட்டுரைகள்

சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் போதைப் பொருள் பாவனை…  ஏலையா க.முருகதாசன்

(போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரணதண்டனை என்பது குறைந்தபட்ச தண்டனையேயாகும் அதற்கும் மேலாக அவர்களுக்குi; தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.)
உலகளவில் போதைப்பொருள் என்பது மிக மிகத் தீங்கானதே என்பதில் மாற்றுக்கருருத்து எதுவுமே இல்லை..போதைப் பொருள் பாவனைக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் அதை ஒழிப்பதில் பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன.அதன் பாரதூரமான விளைவுகளையும் கடுகளவு மன்னிப்புக் கொடுத்தாலும் அதனால் ஏற்படப் போகும் சமூகப் பேரழிவை உணர்ந்து சில நாடுகள் போதைப்பொருள் வைத்திருப்போருக்கு சமரசமில்லாத மரணதண்டனையை வழங்கி வருகிறார்கள்.

நாடு என்ற அடிப்படை அத்திவாரமே ஒவ்வொரு தனிமனிதனிலுமே தங்கியிருக்கின்றது.தனிமனிதனுக்கும் நாடு என்பதற்கும் என்ன சம்பந்தம் என்று அதனை அறிய விவாதம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.ஏனெனில் தனிமனிதனின் ஒருங்கிணைவே நாடெனப் பெயர் பெறுகிறது.

ஒரு நாட்டின் அளவு கோலாக அந்நாட்டினது விவசாயம், தொழிற்சாலைகள், கல்விநிலையங்கள், மருத்துவ நிலையங்கள், காவல்துறைத் திணைக்களங்கள், முப்படைத் திணைக்களங்கள் ,போக்குவரத்துச் சாதனங்கள்,கடைகள்,பொழுதுபோக்கு அம்சங்கள்,விளையாட்டுத்துறை கடல்,அருவி,குளங்களும் அவற்றின் ஊடாகப் பெறும் பயன்களும் அந்நாட்டின் கனிம வளங்கள் என எல்லாமே ஒருங்கிணைந்து நாடு என்ற வடிவத்தைப் பெறுகின்றது.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் உடந்தையா! - ஐபிசி தமிழ்இவையெல்லாவற்றையும்விட மேலே கூறப்பட்டவையைவிட ஒவ்வொரு தனிமனிதனினதும் உடல் சார்ந்த ஆரோக்கியமும் மனம் சார்ந்த ஆரோக்கியமும் பெரும் செல்வமாகப் பார்க்கப்படுகின்றது.

ஒரு நாட்டினுடைய பொருளாதார நிலைமை ஒருவுனுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றதெனிலும்,நல்லரசாங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்து தனது குடிமகன் மகிழ்ச்சியாக வாழ வழி செய்தலில் சாண் ஏற முழம் சறுக்குவது போல அரச நிர்வாகத் திறமை இன்மை,பேரிடர் போன்றவை,குடிமக்களை நோய்க்கிருமிகளை தாக்ததல்,குடிமக்களை நோய்க்கிருமிகளிடமிருந்ர்து காப்பாற்றுவதற்கான தகுந்த நவீன மருந்து இல்லாமை இது போன்ற காரணிகள் ஊடாக ஒரு நாடு தனது மக்களை நோயினின்று விடுவிக்க முடியாத நிலை தோன்றுவதும் உண்டு.

எல்லா வளங்கள் இருந்த நோயுற்ற சமுதாயம் என்பது அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் இக்கட்டுரையை எழுதும் போது எனக்குச் சிங்கப்பூரின் ஆட்சிமுறையே ஞாபகம் வருகின்றது. நான் சிங்கப்பூரில் மூன்று வருடங்கள் வேலை செய்தவன் என்ற ரீதியல் அங்கு வாழ்ந்த காலத்தில் நாளிலும் பொழுதிலம் அந்நாட்டிடினுடைய ஆட்சி முறைமையையும் அதன் வளர்ச்சியையும் கவனித்து உள்வாங்கி மகிழ்ந்தவன்.; சிங்கப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தமிழ் முரசு என்ற தினசரிப் பத்திரிகையில் கீழ்வருமாறு ஒரு செய்தி இருந்தது.

ஒரு நாட்டின் வளம் என்பது அங்குள்ள மக்களின் உண்மையான ஆரோக்கியத்திலேயே தங்கியிருக்கின்றது.அந்த வகையில் சிங்கப்பூர் அரசு தமது மக்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதையே பெரும் வளமாகக் கருதுகிறது என்ற கருத்துப்பட அச்செய்தி இருந்தது.

நோய்நொடியற்ற ஆரோக்கியமான மனிதர்களே ஒரு நாட்டின் உண்மையான வளமாகும் என்பது முற்றிலும் உண்மையாகும்.

வெள்ளிச்சரம்: உலகின் போதைப்பொருள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள்

நோயுற்ற மனிதர்கள்,நோயின் தாக்குதலினால் அவர்கள் உடல் இயங்குநிலையில் இயல்பு நிலை தளர்வுற்று உற்சாகம் குறைந்தவர்களாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருப்பார்கள் அதனால் அவர்களால் நிறைவான பணியைச் செய்ய இயலாது.

ஒரு உடலை நோய்க்கிருமி தாக்கும் போது அந்தந்த உறுப்புகளுக்குத் தேவையான வேதியல் அளவு குறைந்திருந்தால் பாதிப்பு ஏற்படும்.

நோய் வரும் போது கொடுக்கப்படும் மருந்துகள் என்பன உடலுறுப்புகளில் காணப்படும் வேதியல் தனிமங்களை நிறைவு செய்வதற்கேயாகும். நிறைவு செய்யப்படும் போது நோய்க்கிருமிகள் சிதைவடையும் அல்லது செயலற்றுப் போகும்.

ஆனால் ஒரு உடல் போதைப்பொருள் பாவனைக்கு உட்படுமானால்,அப்போதையானது ஒரு மனிதனை உற்சாகப்படுத்தி இயல்பாகத் தோன்றும் குணாம்சங்களை செயற்கையாக பல மடங்காகி அதனால் விளையும் உணர்வுச் சுகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள விளையும் போது ஒருவனுடைய மூளைக்கலங்கள் கட்டுங்கடங்கா உணர்ச்சித் தூண்டலைப் பெறுகின்றன.
இந்தச் சுகத்தை ஒருவனால் விடமுடியாத ஒருவிதமான மயக்க உலகில் குறிப்பாக காற்றில் மிதப்பது போன்ற நிலையில் அவன் இருப்பான்.

ஆனால் இந்தப் போதைப் பெபாருளால் அவனுடைய உடலின் உறுப்பக்கள் யாவும் இயல்பு நிலையை இழந்து அவன் நோயாளியாகிவிடுவான்.கிட்டத்தட்ட பிறழ்மனநிலைக்கு உள்ளாகிவிடுகிறான்.

சமூக விரோதிகளான போதைப் பொருள் வியாபாரிகள் இவ்வியாபாரத்தில் கோடிக்கணக்கானகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்! - தட்டுங்கள் பணத்தைச் சம்பாதித்து அதன் மூலம் சுகபோக வாழ்க்கையை அனுபவினக்க வேண்டுமென்பதற்காக இக்கொடுமையைச் செய்து வருகிறார்கள்.

போதைப்பொருள் பாவனைக்குட்பட்டவர்களில் அனைத்து வயதுடையவர்கள் எனக் கணக்கிடும் போது இலங்கையடங்கிலும் இரண்டரை இலட்சம் பேர் எனக் கணக்கிடலாம்.
போதைப் பொருளுக்கு அடிமையாகுபவர்களின் அறிவு தறிகெட்டுப் போகின்றது.மூளைக்கலங்களின் சிதைவுகள் உடல் உறுப்புகளின் சிதைவுகள் ஏற்படுகின்றது.
போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளந்தலைமுறையினர் உட்பட்ட மாணவர் சமுதாயத்தை நினைக்கும் போது பகீர் என்று மனம் தள்ளாடுகின்றது.

உலகு தழுவிய நவீன ஆண்: பெண் என எல்லையின்றி பழகும் கட்டமைப்பில் போதைப் பொருள் பெரும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்:கியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு உற்சாகம் தருபவை மகிழ்ச்சியத் தருபவை என்பது போகப் போக அந்த உற்சாக தந்த போதைப் பொருள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு ஒருவரைக் கொண்டு செல்ல அந்தப்: போதைபபொருளைப் பாவிப்பகதற்காக அதனை வாங்கவேண்டீய வியூகத்துக்குள் அவர் விழுந்துவிடுவார்.

சிலந்திவலைக்குள் அகப்பட்ட ஒரு பூச்சி போன்ற அவல நிலை அவரைச் சூழ்ந்து கொள்ளுகிறது.

காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சி இந்த உலகம் கால் தூசிக்குச் சமன் என்ற உற்சாகம்,வாழும் போது வாழ்க்கையை அனுபவிக்:வேண்டும் என்று ஆர்ப்பரிக்கும் எண்ணம் என ஒருவர் தன்னை இழக்கத் தொடங்கிவிடுகிறார்.

போதை மருந்துக்கு அடிமையாகும் ஒருவர் குற்றச்செயல்களை மிகச் சாதாரணமாக எடுத்தக் கொள்கிறார்.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் போதைக்கு அடிமையாகும் ஆண் பெண் என்ற இளந்தலைமுறையினர் பெற்றோருடன் கதைப்பதையும் அவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதையும் தவிரக்கின்றார்கள்.

தமது பிள்ளைகள் ஏதோ தப்பான வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை பிள்ளைகளின் கண்களையும் முகத்தையும் வைத்தே அறிந்து கொள்ளும் பெற்றோர் நிம்மதியற்றுப் போய்விடுகிறார்கள்.பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வே தமது வாழ்வு என்று வாழ்பவர்கள் பெற்றோர்.நிம்மதியற்று அவர்கள் நித்திரையின்றி மௌனமாக அழுது கொண்டிருப்பார்கள்.

பெற்றோர் என்பவர்களும் ஆசிரியர்கள் என்பவர்களும் மாணவர்கள் என்பவர்களுமே ஒரு நாட்டின் அச்சு.ஏனெனில் எதிர்கால நாட்டினரை நன்றாக வளர்த்தெடுத்துக் கொடுப்பவர்களே பெற்றோர்களும் ஆசியர்களுமேயாகும்.அந்த அச்சின் அச்சாணி எனும் சமூக ஒழுக்கம் சிதையுமானால் பிரபஞ்சத்தில் பூமியின் சுழற்சி முறை தவறி சிதறித் தூசியாவது போல ஒரு நாடே சிதறிவிடும்.

போதைப்பொருளைப் பாவிக்கத் தொடங்கும் மாணவன் ஒருவன் காலப் போக்கில் அதற்கு அடிமையாகி அதனைப் பாவிக்காது இருக்க முடியாத அளவுக்கு மனநோயாளியாகி விடுகிறார்கள்.

போதைப்பொளை வாங்குவதற்காக போதைப்பொருள் வியாபாரிகளால் மாணவர்கள் வினியோகஸ்தர்களாக வியாபாரிகளாக மாற்றப்படுகிறார்கள்,நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பருவ வயதையடைந்த ஆண் பெண் இரு பாலருக்கும் தோன்றும் பாலின ஈர்ப்பு போதைப்பொருள் பாவனையால் அது தறிகெட்ட நிலையில் அதிகரித்து அவர்களை உடல் ரீதியாக உறவு கொள்ளுதல் என்ற பயங்கரமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

போதைப் பொருள் பாவனையும் கட்டுப்பாடும்-Drug Abuse and Controlபோதைப் பொருளின் மயக்கநிலை,உற்சாக நிலை தமக்கான வாழ்வை நிலைநிறத்தி திருமணத்தின் பின் தாம்பத்திய வாழ்வு வாழ்வதை அலட்சியப்படுத்தி மாணவர் சமுதாயத்தை அதளபாதளத்தில் தள்ளிவிடுகின்றது.

போதைப் பொருளுக்கு சில மாணவிகள் அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் பணத்தின் தேவைக்காக தம்மையே விற்கும் நிலைக்குப் போய்விடுகிறார்களே என்று கேள்விப்படும் போது மனது பகீர் என்கிறது,பதட்டம் ஏற்படுகின்றது.

போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரணதண்டனை என்பது குறைந்தபட்ச தண்டனையேயாகும் அதற்கும் மேலாக அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *