இலங்கை

அரச எம்.பி.க்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!; ஒரு காலத்தில் கைதாவார்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உட்பட்ட கொடுப்பனவுகளை கட்சி நிதியத்துக்கு வழங்குவது பொது சொத்து துஷ்பிரயோகமாகும். அதனால் தேசிய மக்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு காலத்தில் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்துக்கு வழங்குவதை தடை செய்யும் தனி நபர்பபிரேரணை ஒன்று தயாசிறி ஜயசேகர எம்.பியினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரேரணை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், எமக்கு கிடைக்கப்பெறும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நாங்கள் விரும்பி கட்சிக்கு கொடுப்பதாக இருந்தால், எதிர்க்கட்சிக்கு என்ன பிரச்சினை என கேட்கின்றனர். தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறும் சம்பளம் மற்றும் வருகை கொடுப்பனவு என்பன இதில் அடங்குவதில்லை. இதனை அவர்கள் விரும்பியபிரகாரம் செலவழிக்கலாம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்துக்கு வழங்குவது சட்டவிராேதமாகும் என தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன்.அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அந்த கொடுப்பனவுகள் எதற்காக வழங்கப்படுகின்றதோ அதற்காகவே செலழிக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரியாலய கொடுப்பனவு என ஒருஇலட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இந்த பணத்தை பயன்படுத்திக்கொண்டு காரியாலயம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்டு, அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, அங்குவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுக்காெடுக்கும் நோக்கிலே அந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அந் பணத்தை பயன்படுத்தி, மக்கள் சந்திப்புக்கான காரியாலயம் அமைக்காமல், அதனை கட்சி நிதியத்துக்கு வழங்குவது பொது மக்கள் நிதி துஷ்பிரயோகமாகும்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் எரிபொருள் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது. தொலைபேசி கொடுப்பனவாக 50ஆயிரம் ரூபா வழக்கப்படுகிறது. போக்குவரத்து கொடுப்பனவாக 15ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் மக்களின் தேவைகளை கண்டறிந்து, அதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் இந்த கொடுப்பனவுகளை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ளவே இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் பாராளுமன் உறுப்பினர்கள் இந்த கொடுப்பனவுகளை கட்சி நிதியத்துக்கு வழங்குமாக இருந்தால், அதனால் மக்கள் சேவை பாதிக்கப்படும். அதனால் குறித்த ஒரு விடயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள மக்கள் பணம், அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் வேறு விடயங்களுக்கு பயன்படுத்துவது, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பொது சொத்து துஷ்பிரயோகமாகும். இது நீதிவானால் பிணை வழங்க முடியாத குற்றமாகும்.

அதனால் இந்த சட்டம் தற்போது செயற்படுத்தாவிட்டாலும், 2029க்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதியாகும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *