பாதாளக் குழுக்களுடன் நெருக்கம்; பொலிஸார் பலர் விரைவில் சிக்குவர்

பாதாள குழுக்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை பேணிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், அது தொடர்பில் விசேட விசாரணை குழுவொன்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த காலங்களில் பாதாள கும்பல் உள்ளிட்ட குற்றக் கும்பல்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் வெளிநாடுகளிலும், நாட்டுக்குள்ளும் கைதாகியுள்ளதுடன், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூல் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் முதல் கீழ் மட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரையில் சிலர் அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை பேணியுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிவருவதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் பாதாள குழுக்களுடன் ஏதேனும் வகையில் தொடர்புகளை பேணிய பொலிஸ் அதிகாரிகள் சிலர் கைதாகியுள்ளனர். அத்துடன் அண்மையில் கைதாகிய குறித்த கொலையுடன் தொடர்புடைய செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் தற்போது கைதாகியுள்ளார்.
இந்நிலையில் பாதாள குழுக்கள் மற்றும் குற்றக்கும்பல்களுக்கு உதவி அவர்களுடன் தொடர்புகளை பேணிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()