இலங்கை

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்!; தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடைத்த பிறகு, மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்தப்படுமா அல்லது ஒன்றாக நடத்தப்படுமா என்பதை அது முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமானால், சட்டத்தில் சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டும் தேர்தல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு அவை நடத்தப்படாவிட்டால், அந்தப் பணம் கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *