இலங்கை

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் கிழங்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது

இதன்போது சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பொது நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button