உலகம்

பொது இடங்களில் முகத்திரை அணிவதை தடை செய்ய போர்ச்சுகல் பாராளுமன்றம் ஒப்புதல்

தீவிர வலதுசாரி சேகா (Sega) கட்சியால் முன்மொழியப்பட்ட பாலினம் அல்லது மத காரணங்களுக்காக பொது இடங்களில் முகத்திரை அணிவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு போர்ச்சுகல் (Portugal) பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதாவின் கீழ், பொது இடங்களில் பர்தாக்கள் (burqas) மற்றும் நிகாப்கள் (niqabs) அணிபவர்களுக்கு 200 முதல் 4,000 யூரோக்கள் ($234-$4,670) வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஒருவரை முகத்திரை அணிய கட்டாயப்படுத்தினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

விமானங்கள், இராஜதந்திர வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் முகத்திரை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசாவால் (Marcelo Rebelo de Sousa) அங்கீகரிக்கப்பட்டால் போர்ச்சுகல் முகத்திரை அணிவதை தடை விதித்த பிரான்ஸ் (France), ஆஸ்திரியா (Austria), பெல்ஜியம் (Belgium) மற்றும் நெதர்லாந்து (Netherland) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் இணையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *