இலங்கை

553 அரச பஸ்கள் ,15 டிப்போக்கள், 24 ரயில் நிலையங்களை தீக்கிரையாக்கிய ஜே .வி.பி.!

553 அரச பஸ்களையும் ,15 டிப்போக்களையும், 24 புகையிரத நிலையங்களையும் அரச சொத்துக்களையும் தீ வைத்து அழித்தவர்கள் ஜே .வி.பி.யினர் . ஆகவே 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறும் ஜே .வி.பி.யினர் தான் அந்த சாபத்தின் முக்கிய பங்காளிகள் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் 2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தற்போதய அரச தரப்பினர் கடந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கிறார்கள். தற்போதும், கடந்த காலங்களிலும் சிறந்தவர்கள் அரசியலில் இருந்துள்ளார்கள்.நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள். ஆகவே அனைவரையும் மோசடியார்கள் என்று விமர்சிக்க வேண்டாம்.

75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறுகின் றீர்கள் .75 ஆண்டு அரசியல் கட்டமைப்பில் நாட்டுக்கு ஏதும் நடக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.சாபத்தின் பிரதான பங்குதாரர் என்றே ஜே .வி.பி.யை குறிப்பிட வேண்டும். 553 அரச பஸ்களையும்,15 டிப்போக்களையும், 24 புகையிரத நிலையங்களையும் அரச சொத்துக்களையும் தீ வைத்து அழித்தவர்கள் ஜே .வி.பி.யினர் . ஆகவே 75 ஆண்டுகாலத்தை பற்றி பேசும் போது உங்கள் வரலாற்றை மறக்க வேண்டாம்.ஆகவே 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறும் ஜே .வி.பி.யினர் தான் அந்த சாபத்தின் முக்கிய பங்காளிகள்.

ராஜபக்சக்களின் ஊழல் மோசடி பற்றி பேசுகிறார்கள்.மஹிந்த ராஜபக்சவை யார் நியமித்தது?மஹிந்த ராஜபக்சவின் மேடைக்கு நாங்கள் செல்லவில்லை. ஜே .வி.பி. தான் மஹிந்த ராஜபக்ச நல்லவர் என்று கூறிக் கொண்டு அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது.

1994 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஜே .வி.பி. நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியது. ஆகவே எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறாதீர்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *