இலங்கை

விரட்டியடிப்பதற்கு முன்னரே வெளியேறியிருக்க வேண்டும்

அதிகார துஷ்பிரயோகம் செய்தோரே இன்று தண்டிக்கப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோர் விரட்டியடிப்பதற்கு முன்னரே வெளியில் சென்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அத்துடன், பொதுமக்களுக்கு செய்த சத்தியத்தை அரசாங்கம் இன்று நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் .

இன்று உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அவரின் ஆதரவாளர்கள் அணிதிரண்டு சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அப்போது, அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருப்பதை பார்த்தால் வியப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தங்களை போகச் சொல்லிவிட்டார்கள்.

போவதற்கு இடமில்லை என்றும் அவர் கூறியதாகவும் ஆனால், அவர் அதற்காக வெட்கமடைய வேண்டும் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோர் விரட்டியடிப்பதற்கு முன்னரே வெளியில் சென்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. அவர்களுக்கான சலுகைகளே குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *