இலங்கை

ஐதேக மாநாட்டுக்கு நாள் நிர்ணயம் – ரணில், சஜித் சங்கமம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் குறித்த விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையிலேயே சிறிகொத்தவில் அல்லாமல் பொது இடத்தில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *