உலகம்

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஒபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையில் போர் தொடங்கியதுடன், இருநாடுகளும் தங்களது வான்மார்க்கத்தினை மூடின.

மேலும், இருநாடுகளிலும் வசித்துவந்த இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் தங்களது நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன், இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானின் பயணிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை நுழைவதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையானது, கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டதுடன், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தடையானது வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையும் செப்.டெம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *