இலக்கியச்சோலை

“தமிழாய் இசையாய் மலர்ந்த கீதை”

உலகளாவிய சின்மயா இயக்கம் தனது 75 – ஆவது ஆண்டினை  கொண்டாடி வருகின்றது.   அதனொரு செயல்பாடு பகவத் கீதை  முழுவதையும் தமிழ்ப் படுத்துவது. சுவாமி  மித்ரானந்தா அவர்களின் வழிகாட்டுதலின்படி பகவத் கீதை ஏழுபேர் கொண்ட குழுவினரால்  சிறப்பாக  தமிழ்ப்படுத்தப்பட்டது.   பதினெட்டு அத்தியாயமும் தமிழ்ப் படுத்தப்பட்டு , இசைஞானி இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்டது.

மாண்புமிகு பாரத  பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்கீதை கங்கைகொண்ட சோழபுரத்தில் 27. 8 . 25 அன்று  வெளியிடப்பட்டது.

மக்களின் மேலான புரிதலுக்கு ஒரு சான்று:

பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ரிதம்
தர்ம-ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் தழைத்தோங்குமோ                     அப்போதெல்லாம் என்னை நானே தோற்றுவிக்கிறேன் பாரதா!

 இந்த மாபெரும் பணியில் எழுவரில் ஒருவராய் நானும் இணைந்திருந்தது எனக்கு பெருமகிழ்வையும் நிறைவையும் தருகிறது.

பா. மா. சாயிலட்சுமி

சின்மயா இயக்கம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *