உலகம்
இஸ்ரேலுடன் இடம்பெற்ற போர்; 21,000 பேர் கைது..!

‘ஒப்ரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த ஜூன் 13 அன்று ஈரானின் இராணுவத் தளபாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் 12 ஆம் நாளில் ஜூன் 24 அன்று போர்நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
சுமார் 260 இற்கும் மேற்பட்டோர் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த ஜூன் மாதம் மட்டும் இஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()