இந்தியா

தந்தையையே ஒட்டு கேட்டதாக அன்புமணி மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

தமது மகனான அன்புமணி, தம்மையே உளவு பார்த்ததாக அவரது தந்தையான, பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிடுகையில், ‘உலகத்தில் தந்தையையே உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்கிறது.

அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 17ஆம் திகதி பொதுக்குழு அறிவித்து இருக்கிறேன். அதனால் வேறு எவரும் பாமக பெயரில் பொதுக்குழு கூட்டுகிறேன் என்று சொல்வது சட்டங்களுக்கும், கட்சி விதிகளுக்கும் புறம்பானது.

என்னை உளவு பார்த்து இருக்கிறார்கள். இது குறித்து விழுப்புரம் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளேன்.

அதேபோல் இணைய குற்றப்பிரிவிலும் முறைப்பாட்டை வழங்கியுள்ளேன்.

ஒட்டு கேட்கும் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அவை எல்லாவற்றையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து இருக்கிறோம்.

கட்சியின் நிறுவனர், தலைவர் நான் தான். என்னை கட்சியினர் சந்திக்க கூடாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *