மனிதருள் மாணிக்கம் எனப் பெருமை பெற்ற கலைவிளக்குத் திரு.சு.பாக்கியநாதன்…. ஏலையா க.முருகதாசன்

நிமிர்வு என்ற சொல்லும் நிறைகுடம் தளம்பாது என்ற சொல்லும் வகைதொகையாக எல்லாருக்கும் விளிக்கப்படும் சொல்லல்ல.
இச்சொற்கள் முழுமையின் வடிவமாக அத்தகையவர்களை நோக்கி மகிழ்ந்து மெய்யாக உணர்ந்து கோடிட்டும் சுட்டிநின்றும்,ஒருவரை சிலாகித்தும் விதந்துரைக்கும் சொல்லாகும்.
அத்தகைய ஒருவராக ஜேர்மனியில் 45 வருடங்களாக கலை,இலக்கியம்,கல்வி, பொதுத்தொண்டு எனச் செய்து வருபவரும் யாழ்பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற கலைமாணிப் பட்டதாரியும் முதுகலைமாணியுமாகிய திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன் அவர்களுக்கு அவரைப் பாராட்டியும் வாழ்த்தியும் கடந்12.07.25 அன்று,அவராற்றிய கலை,இலக்கிய,கல்விசார் விழுமியங்களை உள்வாங்கி விழா எடுத்து அவரைப் பாராட்டி மகிழ்ந்தோம்.
விழாவின் மையக்கருப்பொருளாக விழாவுக்குரியவரான முதுகலைமாணியும், கலைமாணியுமான திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன் அவர்கள் ஜேர்மனிக்கு அவரும் அவரின் துணைவியாரும் புலம்பெயர்ந்து வந்ததன் பின்பு அவர்களுக்கு கல்வி கொடுத்த தனித்துவ அளுமைகளான இலக்கியம் எனும் எழுத்துத்துறை சார்ந்த, கலை சார்ந்த,கல்வியின் நீட்சியாக பரிணாமக் கல்வி சார்ந்த,பொது வாழ்வு எனும் உதவும் சமூகப் பணிசார்ந்தவை என அனைத்துத் தகுதிகளையும் 45 ஆண்டுகால அவரின் வாழ்க்கையைச் சீர்தூக்கிப்: பார்த்து கலைவிளக்கு திரு.பாக்கியநாதன் அவர்கள் மனிதருள் மாணிக்கமே என ஒருமித்த கூர்மையுடன் அத்தகைமையாளரின் பன்முக சேவைக்கு மதிப்பளித்து விழா எடுத்து மனிதருள் மாணிக்கம் என்ற கௌரவ விருதளித்து கௌரவிக்கப்பட்டார்.
ஒருவரின் கலை,இலக்கிய,கல்வி, பொது வாழ்வு என்பவற்றை நோக்குவோர் இவரால் இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமாகின்றது என பொதுவெளியிலும்,ஒருவரோடு ஒருவர் சந்திக்கும் சந்திப்புகளிலும் கலந்தரையாடுவதும்,அவை கூர்மைபெற்று ஒவ்வொருவரினதும் எண்ணங்கள ;மெருகுபெறுவதும்; அதனை செயல்வடிவமாக்குவதில் சளைக்காத அக்கறை கொண்டவர்களான வெற்றிமணிப் பத்திரிகையின் ஆசிரியர் கலாநிதி திரு.மு.க.சு.சிவகுமாரன்,அகரம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஐரோப்பிய தமிழ் வானொலியின் இயக்குநருமான திரு.த.இரவீந்திரன்,பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் ஏழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவரும்,தமிழ் அரங்கத்தின் பொறுப்பாளருமான திரு.வி.சபேசன் ஆகுpயோரின் முனைப்பான செயல்பாட்டின் ஊடாகவும் தமிழ் ரைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியரான திரு.செ.தவா அவர்களின் ஒத்துழைப்புடனும் அது விழாவெடுத்துக் கௌரவித்தல் என்ற செயலாகி இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
கலை,இலக்கியத்துறை ஈடுபாட்டாளர்கள் எனவும்,அவற்றின் சமூகத் தேவை உணர்ந்த மக்கள் எனவும் மண்டபம்நிறை கொண்ட அவையாக இவ்விழா பூரணமடைந்திருந்தது.
தாயகத்தில் பாடசாலையில் கல்வி கற்ற காலத்திலும், அதற்குப் பின்னரான பல்கலைக்கழக வாழ்விலும் இவரிடம் காணப்பட்ட தனித்துவ ஆற்றல்களான கலை,இலக்கியம்,கல்வி விழுமிய ஆற்றல்கள் எனவும் அதனோடு சமாந்தரமாகப் பயணித்த விளையாட்டுத்துறைகளான உதைபந்தாட்டம்,துடுப்பாட்டம்,மென்பந்தாட்டம்,பூப்பந்தபாட்டம் போன்றவை புலம்பெயர் நாட்டிலும் தொடர்வதனால் அது அவரின் சளைக்காத விட்டகலகாத செயல்பாடால் சாத்தியமாகும் என்பதை அவரை அவதானித்ததிலிருந்து கண்டுணர முடிந்தது.
பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற காலத்தில்,தமிழ் மன்றம்,இந்து மன்றம் போன்றவற்றின் செயல்பாடுகளில் தமிழ்மன்றத்தின்: முதன்மைச் செயல்பாட்டாளராகவும்,இந்து மன்றத்தின் தலைவராகவும் தொண்டழாற்றியதுடன் விளையாட்டுத்துறையின் பூப்பந்தாட்ட விளையாட்டில் இவர் வெற்றிவாகைசூடிய வெற்றித்தகுதி இன்றளவும் அதனை அத்துறைசார் விளையாட்டு வீரர்களால் தாண்ட முடியாதிருப்பதை அறிகிறோம்.
அதன் தொடர்ச்சியாக பலம்பெயர்ந்து வந்த ஜேர்மனியில்,சிந்திக்கத் தூண்டிய ஜேர்மனியக் கலாச்சாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டதிலிருந்து அவரின் 45 ஆண்டுகால புலம்பெயர் வாழ்க்கை கலைவிளக்குச் சஞ்சிகை,கலைவிளக்கு வீடியோ,கலை இலக்கிய சிறப்பாளர்களை பேட்டி கண்டமை இலக்கியச் சந்திப்பு, அழகிய கம்பீரமான காதலியும் மனைவியுமான முதுகலைமாணியுமான,கலைமாணிப்பட்டதாரியான திருமதி.விக்னேஸ்வரி பாக்கியநாதன் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட 12 நூல்கள்,அவர் எழுதி வெளியிட்ட 5 நூல்கள்,29 செயல்பாடுகள் என கனதியானவையாக பரந்து செழுமி நிற்பதைக் காண முடிகின்றது.
குடும்பத்தில் ஒருவர் கலை இலக்கியம்,கல்வி எனத் தொண்டில் ஈடுபடுபவராயின் அவருடைய வீடு தினந்தோறம் அதுபற்றிச் சிந்திப்பதாலும் கலந்துரையாடுவதாலும் அந்த வீட்டின் சூழ்நிலை அதுசார்ந்தே இருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுவதுண்டு.இன்னும் சொல்லப் போனால் இது கற்பனையாகினும் கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் என்பார்களே அது போல இத்தகையோரின் செயல்பாடுகளை,அறிவார்த்தமாக உரையாடும் முறைமைகளை அவ்வீட்டிலுள்ள பொருட்களும்கூட உள்வாங்கி மௌனமாக சுவைத்து இரசிக்கும் எனலாம்.
அதுபோலக்; கலைவிளக்குத் திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன் அவர்களின் அதே கலை,இலக்கிய,கல்வி,பல்கலைக்கழகப் பட்டத் தகுதியை இன்னும் ஒருபடிமேலான கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற திருமதி.விக்னா பாக்கியநாதன் என விளிக்கப்படும் அவரின் துணைவியாரும் பெற்றிருக்கையில் அவர்களின் நாளாந்த வாழ்க்கையில் அவர்களிருவரும் கலை,இலக்கியம்,கல்வி நூல் வெளியீடுகள் என கலந்துரையாடாத விவாதிக்காத கணப்பொழுதுகளே இருக்காது என்பதே உண்மையிலும் உண்மை.

ஓவ்வொரு செயல்பாடும் அல்லது நடவடிக்கை என்பதனால் கிடைக்கும் பெறுபேறுகள் சமூகத்தை செழுமையாக்குபவை.ஒரு நூலை வாசிப்பவர் வாசிக்கும் போதும்,வாசித்த பின்னரும் அவர் உள்வாங்கிய அறிவால் சிந்தனையாளராவார். அந்தச் சிந்தனை,சிந்தனைகளாகப் பலவாகி அவை பரந்து வளரத் தொடங்கும்.அது அறிவின் புதிய கதவுகளைத் திறந்து கொண்டே இருக்கும்.அது போன்றுதான் கலை வடிவங்களும்.கலை வடிவங்களைப் பார்க்கும் ஒருவர் அதனூடாகப் புதிய உலகைப் பார்ப்பார் பார்க்க முடியும்.அதுநோக்கில் இத்தகமையாளரின் ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு பெறுமான உலகாகும்.
கலைவிளக்குத் திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன் அவர்களின் பன்முகச் செயல்பாடுகளை அதனால் சமூகம் பெற்ற பெறுபெறுகள் எவையெவை என ஆய்வுநோக்கில் ஊடுருவி நோக்குகையில் அதுவே ஒரு பெரும் நூலாகத் தோற்றம் பெறும் நில தோன்றும்.
கலை,இலக்கியத்தோடும்,கல்வியோடும் பின்னிப் பிணைந்து வாழும் பலரிடம் காணப்படும் கர்வத்தை இவரிடம் காண முடியாது.மிகவும் யதார்த்தவாதியாக தன் தகுதியை எவரிடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ளாத எளிமையான மனிதராக எல்லாரையும் பாசத்துடன் மாணிக்கம் என விளித்தழைத்து அன்பு சொரிந்து நிறைகுடம் தளம்பாது என்பதற்கொப்ப இருந்து வருகிறார்.
இத்தகு எளிமையாளரை,அவரின் பண்பினையும் அறிவுத் தகைமையினையும் இனம் காண்பதும் அதனைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து விழா எடுத்துச் சிலாகித்து அதனை விதந்துரைப்பதும் அதுசார் இனமாந்தரின் பெரும் கடமையாகும்
அச்சிறப்பான செயல,; அப்பெருமகனாருக்கு மனிதருள் மாணிக்கம் என்ற விருதளித்து கௌரவிக்கப்பட்டு நிறைவேறியிருப்பது கண்டு அனைவருமாக மகிழ்கிறோம்.
![]()