சூட்சுமத்தை யாரும் அறிவீரோ?…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அண்ணா தோப்பில் எலுமிச்சை வளர்த்தார்
காய்த்தன ஒவ்வொன்றும் நூற்றக்கணக்கில்
பல ஆண்டுகளாய் அப்படியே காய்த்து நிற்க
பழுதாயேதும் அதைப்பற்றி சொல்லவில்லை
புதிதாக இரு எலுமிச்சை மரங்கள் வங்கிவந்து
விருப்பமோடு தோப்பதில் நட்டு வைத்தாரவர்
அற்புதமா அல்ல அதிசயமா என்று எண்ணிட
ஆயிரக் கணக்கில் காய்த்துக் குலுங்கியதே
சூழ்நிலையில் ஒரு மாற்றமும் வந்ததுமில்லை
பாய்ச்சிய நீரினிலும் எந்தக் குறைவுமில்லை
உரமிட்டதில் வேறுபாடு ஏதும் காட்டவில்லை
காய்ப்பதில் வேறுபாடு வந்ததும் எதனாலோ
குழம்பிப்போய் நானும் இருந்த வேளையிலே
ஒரு குதூகலம் நிகழந்திட நான் மகிழ்ந்தேன்
பழைய எலுமிச்சை மரங்களிலேயும் ஒன்றில்
எதிர்பாராது ஆயிரத்துக்குமேல் காய்த்ததுவே
திடீரென நிறையக் காய்த்ததுதான் எப்படி
தன்மையறிய முயன்று நின்ற வேளையிலே
ஒருமுறை மட்டும் கண்ணாமூச்சி காட்டியது
மறுமுறை அதேபோல் காய்க்க மறுத்ததுவே
காரணம் உண்மை அறிந்திட காத்திருந்தேன்
எண்ணிக்கை வைத்துத் தரம் காணமாட்டேன்
தரமில்லை என்று ஊராரும் சொன்னாரெனில்
வேரோடு பிடுங்கியே அண்ணா எறிந்திருப்பார்
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலராக
கண்டும் காணாதது போலவே இருப்போரே?
எவரேனும் இதன் சூட்சுமத்தையும் அறிவீரோ
அதை அறிந்தால் காரணத்தைப் பகிர்வீரோ!

![]()